tamilnadu epaper

அத்தமகளே

அத்தமகளே

அம்மியில அரைச்சுவச்ச 

அயிரமீனுக் கொழம்பு

 

அழகான அத்தமகளே

எனக்குன்னு பொறந்தவளே 

 

வெட்கத்தை விட்டுத்தள்ளு

வந்துதான் கட்டிக்கொள்ளு 

 

மொறைப்பையன் நாந்தானே

மொறச்சித்தான் பாக்காதடி 

 

அம்சமாத்தான் இருக்கிறியே

மனசதான் மயக்குறியே 

 

ரெட்டசடைப் பின்னலாலே 

என்னைத்தான் இழுக்கிறியே 

 

தாவணிப்போட்டச் சின்னபுள்ள

தாரமாக வருவதெப்போ 

 

தெருவெல்லாம் மணக்குதடி

மூக்கைத்தான் துளைக்குதடி 

 

அம்மியில அரைச்சுவச்ச

அயிரமீனு கொழம்பு 

 

ருசித்துப் பாக்கணுமே

தட்டுலதான் தாயேன்டி 

 

சம்பாநெல்லு சோத்துல

பிசைஞ்சு சாப்பிடணும் 

 

ஆசையோடு தந்தாக்கா

வயிறுந்தான் ரொம்பிடுமே 

 

ஒன்னயும் ரசிச்சிடுவேன்

சாதத்தையும் தின்னுடுவேனே 

 

 

பெ.வெங்கட லட்சுமி காந்தன். 

விருதுநகர்