tamilnadu epaper

அன்பால் வாழ்வோம்

அன்பால் வாழ்வோம்

அன்பு மனமொன்றே ஆருயிரைக் காப்பாற்றும்
இன்ப ஒலியெழுப்பி இன்னிசைக் கூட்டாகும்
துன்பக் கடல்கடக்கும் தூய உளம்நிறைக்கும்
அன்பால் வளர்ந்திடுவோம் அன்பால் இணைந்திடுவோம்
--- அகிலம் நிலைபெறவே அன்பால் இணைந்திடுவோம்

அன்பொன்றே நம்மையெலாம் ஆளும் பிணிகட்கோ
அன்பொன்றே நல்மருந்தாய் ஆகும் அறிவோமே
அன்பொன்றே போர்தடுத்து ஆட்கொள்ளும் நம்மையெலாம்
அன்பொன்றை வேதமாக்கி அன்பால் இணைந்திடுவோம்
----ஆயுள் பெருகிடவே அன்பால் இணைந்திடுவோம்


அன்பாற்றான் காந்திமகான் அண்ணல் எனவானார்
அன்பாற்றான் புத்தர் அகிலமெலாம் வென்றிட்டார்
அன்பாற்றான் ஏசுபிரான் ஆண்டவர் ஆனாரே
அன்பாற்றான் எல்லாமும் அன்பால் இணைந்திடுவோம்
----அன்பால் உலகுயர  அன்பால் இணைந்திடுவோம் 


இராம வேல்முருகன்
வலங்கைமான்