அவளை நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் பாஸ்கர் "என்னை பொறுத்த அளவுக்கு நான்" />

tamilnadu epaper

அன்லக்கி பாஸ்கர்

அன்லக்கி பாஸ்கர்


"நீ செஞ்சது கொஞ்சம் கூட சரியில்ல பாஸ்கர்" எதிரில் நின்ற நிவேதா சற்று கோபமாகவே சொன்னாள்.

அவளை நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் பாஸ்கர் "என்னை பொறுத்த அளவுக்கு நான் செஞ்சது சரிதான்"


 ஒரு எகத்தாளமான சிரிப்பை உதிர்த்த நிவேதா "உனக்கு லக்கு இல்லை அவ்வளவு தான் நான் சொல்லுவேன் அந்த வேலையை பத்தி உனக்கு என்ன தெரியும் "

"எனக்கு அந்த வேலையை பத்தி எல்லாமே தெரியும் தெரிஞ்சதுனால தான் ரிசைன் பன்னேன் நிவேதா"

" மூணு வருஷம் தான் நீ அந்த பேங்க் ல டெம்ப்ரவரி அதுக்கு அப்புறம் பணி நிரந்தரம் நல்ல சம்பளம் அத போய் விட்டுட்டு நிக்கிறியே அந்த மூணு வருஷமும் கூட உனக்கு நிறைய இன்சென்ட்டிவ்ஸ் இருக்கு சைடு வருமானம் இருக்கு தெரியுமா"

 " எனக்கு இன்சென்ட்டிஸ் பத்தி எந்த கவலையும் இல்லை ஓகே தான், ஆனா அந்த சைடு வருமானம் சொன்னே ல அதுதான் எனக்கு பிரச்சனையே "

என்ன ஆச்சு அதுல என்ன பிரச்சனை பாஸ்கர் "

"கொஞ்சம் ஓப்பனா பேசவா ஜுவல் லோன் ல 100 பவுன் 50 பவுன் அடகு வைக்கிற அப்பர் கிளாஸ்க்கு நம்ம ஒரு கிராமுக்கு 7 ஆயிரம் தரோம் ஓகே அவங்களுக்கு இது உதவியா இருக்கும் அதே நேரத்துல நம்ம இன்னொரு தப்பையும் பண்ணிக்கிட்டு இருக்கோம் சைடு வருமானத்துக்காக அதுதான் எனக்கு பிடிக்கல "

"ஆமா அதை ஏன் தப்பு னு நினைக்கிற? அதுவும் நம்ம செய்ற ஒரு நன்மைதான் "


"என்ன நன்மை பெரிய பெரிய பணக்காரங்க நகை எல்லாம் பத்திரமா லாக்கர்ல வச்சு பாதுகாத்து வைக்கிறோம் . ஒரு பவுன் அஞ்சு பவுனு அதிகபட்சம் 20 பவுன் இந்த அளவுக்கு தங்களோட நகைகளை 10 அல்லது 15 நகைக்கடைகளையும் பைனான்ஸ்ல அடகு வைத்து தடுமாறுற ஏழை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவங்கல மீட்டெடுத்து காப்பாத்தணும்னு தான் நம்ம பேங்க்கிற்கு வராங்க நாமளும் அடகு வச்ச ரசிதை மீட்டு எக்ஸ்ட்ராவா பணம் தந்து ஒரு வகையை பாதுகாப்பா வச்சிருக்கோம் வட்டி மட்டும் கட்டுங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை சொல்றோம் "


"ஆமா பாஸ்கர் அதுதானே செய்றோம்"


"உனமைய சொல்லு நம்ம அப்படியா செஞ்சிட்டு இருக்கோம் வேற கஸ்டமர் கிட்ட அந்த ஏழைகள் கிட்ட மிடில் கிளாஸ் மக்கள்ட்ட அவங்களுக்கே தெரியாம அவங்களோட வறுமையை நாம வித்துக்கிட்டு இருக்கோம் அவங்க மனச மாத்தி கன்வின்ஸ் பண்ணி கொண்டு வர 2 பவுன்ல இருந்து 20பவுனு வரைக்கும் இடையில் இருக்கிற புரோக்கர்களை வைத்து விக்கிறோம் அதுல நமக்கு பவுனுக்கு 2000 ரூபாய் கிடைக்குது ஒரு நாளைக்கு மட்டும் நம்ம அஞ்சு பத்து ஆயிரம் கமிஷன் அடிக்கிறோம் தினமும் வீட்டுக்கு போகும்போது கை நிறைய கொண்டு போறோம் ஆனால் அது பணம் மாதிரி தெரியல பாவம் மாதிரி தெரியுது நான் வீட்டுக்கு பாவத்தை கொண்டு போக விரும்பல" 


"இதுவும் அவங்களுக்கு உதவிதான்"


"எது அடி மாட்டு விலைக்கு ஏமாத்தி நகைய வாங்கி விக்கிறதா வேண்டாம் நிவேதா அது ஏமாத்து வேலை .. நான் அன்லக்கியாக இருந்துட்டு போறேன் என்ன விட்டுடு இந்த பாவத்தை என்னால் செய்ய முடியாது சொல்லிவிட்டு பாஸ்கர் விறுவிறுவென நடந்து போனான்.


-ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி