கமலிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டு ஆகி இருந்தது . கணவன் சரவணனுக்கு அரசு வேலை.பெற்றோர் அணைப்பு , புகுந்த வீட்டு ஈர்ப்பு என்று" />
tamilnadu epaper

ஆதரவுக் கரம்

ஆதரவுக் கரம்


   " கமலிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டு ஆகி இருந்தது . கணவன் சரவணனுக்கு அரசு வேலை.பெற்றோர் அணைப்பு , புகுந்த வீட்டு ஈர்ப்பு என்று காலம் இனிமையாக நகர்ந்தது .


     விதி யாரைத்தான் விட்டு வைத்தது ஒரு சாலை விபத்தில் சரவணன் இறந்து போனான் .


    இருவீட்டு உறவும் நட்பும் அன்பும் அணைப்பும் ஈர்ப்பும் கரைந்து போனது சில மாதங்களில் ...."


    கணவன் வேலை கமலிக்கு கிடைத்தது பல மறுமண வாய்ப்பு கிடைத்தும் அதை ஏற்க வில்லை கமலி . தனிமையில் வாழ்ந்து வந்தாள் .


    அனாதை என்கிற எண்ணம் மட்டும் மனதில் வேரூன்றி நின்றது. சில ஆண்டுகள் நகர ஒரு அனாதை குழந்தை கமலி கைக்கு வந்தது .அந்த குழந்தைக்கு ராஜா என்று பெயர் வைத்து வளர்த்தால் .


     அனாதைக்கு அனாதை தான் ஆதரவு என்கிற கருத்தில் கமலி குழந்தையை பெற்றவள் போல் வளர்த்தால் .


    வளர்ந்து ஆளானாலும் கமலின் மகன் ராஜா மகாராணியைப் போல் கவனித்துக் கொண்டான் , தன் திருமணத்திற்கு பிறகும் அதை அப்படியே தொடர்ந்தான் ராஜா .


    கமலி ராஜா இருவரும் அனாதை இல்லத்துக்கு பெரிய உதவி செய்து வந்தனர் .


     அனாதை குழந்தையை கை கொடுத்து தூக்கியதால் முதியோர் இல்லம் நாடும் நிலைமை என்றும் எழவில்லை கமலிக்கு ...." 


- சீர்காழி. ஆர். சீதாராமன் .