சென்னை அருகே மீனம்பாக்கம் ஏரியாவில் நடுத்தர வீடு. சுரேஷ் மற்றும் அவன் " />
" சென்னை அருகே மீனம்பாக்கம் ஏரியாவில் நடுத்தர வீடு. சுரேஷ் மற்றும் அவன் பெற்றோர்கள் அப்பா ராகவன் அம்மா கீதா அதில் வசித்தனர் .
சுரேஷ் ஒரு மெடிக்கல் ரெப்ரசன்டேட்டிவ் எந்த வியாதிக்கு என்ன மருந்துன்னு லாவகமா சொல்லி எடுத்து காட்டாதுல பலே கில்லாடி.
இந்த திறமை அவனுடன் வேலை பார்க்கும் சக நண்பர்கள் மற்றும் டாக்டர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும் .
சுரேஷ் தந்தை ராகவன் ஒரு ரிடயர்டு டீச்சர் தினமும் எதோ தன்னால முடிஞ்ச உடற்பயிற்சி செய்வார் அவ்வளவு தான் , அம்மா கீதா இல்லத்தரசி சரியான உழைப்பாளி .
ஒரு நாள் காலையில் பேப்பர் படித்து கொண்டு நாற்காலியில் அமர்ந்து இருந்த, சுரேஷ் தந்தை ராகவனுக்கு திடீர் ப்ரைன் அட்டாக் . வீடு கலவரமாக இருந்தது . பயம் பதற்றம் , கீதாவின் அலறல் சத்தம். எதுவும் புரியாமல் விழிக்க சுரேஷ் நண்பர் ராமனை உடன் போனில் சில முக்கிய விபரத்தை மட்டும் சொல்லி , உடன் வீட்டுக்கு அழைத்தான் . .
நண்பன் ராமன் வரும் போது டாக்டர் ராஜாவையும் உடன் அழைத்து வந்தான் சுரேஷ் வீட்டிற்கு .
டாக்டர் ராஜா எல்லா செக்கப்பும் பண்ணிட்டு மருந்து மாத்திரை கொடுத்தார் , நடை பயிற்சியும் கொடுத்தார் , ராகவனிடம் நெடுநேரம் பேச்சும் கொடுத்தார் சிறிது பேசவும் வைத்தார் டாக்டர் ராஜா.
தொடர் சிகிச்சை நல்ல பலன் தரும், உங்க அப்பா உயிருக்கு பயம் எதுவும் இல்லை . ஆனா மெதுவா தான் இயல்பு திரும்பும் ,பல மாதங்கள் ட்ரீட்மென்ட் எடுத்தா சரியா போய்விடும் என்று சொன்னார்.
கிளம்பும் முன் சுரேசிடம் நண்பன் ராமன் எல்லாருக்கும் வியாதிக்கு நிமிஷத்துல மருந்து மாத்திரை சொல்லுவியே சுரேஷ் ,உங்க அப்பா விசயத்துல என்னாச்சு ... ஏன் முதலுதவி செய்யவில்லை மறந்து போய் விட்டதா எனக் கேட்டான் .
தடுமாற்றம் மனக்குழப்பம் எல்லாமே அடுத்து அடுத்து வர
ரத்த பாசம் கண்ணை மறைத்து விட்டது என்றான் உணர்ச்சி ததும்ப அப்பாவியாக சுரேஷ்..."
- சீர்காழி .ஆர்.சீதாராமன் .
18 A . பட்டேல் தெரு.
தென்பாதி .சீர்காழி .
609 111 .