இருட்டுக்குப் பொட்டு வைத்தது போல.. தெருவிளக்குகள். அங்கொன்றும் இங்கொன்றுமாய்..
மங்கிய மாலையில் அந்த நகரத்தின் பரபரப்பான முக்கியச் சாலை.. அங்கேதான் அந்த சந்து.. அதிலேதான் அவள் குடிசை!
மல்லிகை மணம் நாசியைத் துளைக்க.. இருட்டில்ஒரு சிலையாக அவள்..
வாடிக்கையாளனைத்தேடும் வாடகை வாழ்க்கை! வியாபார காதல். நழுவும் உடை.. நிறையும் வயிறு! கூலிக்கு மாரடிக்கும் பாலியல் தொழிலாளி!
அதோ அந்த மூலையில்.. அவளின் குடிசைக்கு இதோ அவள் ஒரு வயதான வாடிக்கையுடன்.. அழைத்துக்கொண்டு நடக்கிறாள்.
வயதான ஒரு கிழவி அவளுக்குச் சொந்தம். அவள் கையில் ஒரு குழந்தை அழுகிறது. அது இவளின் குழந்தை. அவளுக்கு கணவன் என்று எவனுமில்லை..
இருந்தான் ஒருவன் ஏமாற்றி பிள்ளை கொடுத்துவிட்டு பறந்து சென்றான்! தனித்திருந்தாள்.. எந்த வேலையும் இவளின் கண்ணசைவுக்குத்தான் கிடைக்கும் நிலை..
பசி..பசி..பசி.. அவளுக்கு குழந்தைக்கு! இதோ சந்து முனையில் ஒரு இருட்டுச்சிலை.. படுக்கையில் கல்லாக கிடக்கும் பாலியல் தொழிலாளி!
குழந்தை வெளியே அழுகிறது!
பால்வாங்க காசு இல்லை..
இவள் இங்கே பருவ மேனியை பந்திக்கு வைத்து.. பாலூட்ட சம்பாதிக்கிறாள்.. அவன் தந்துவிட்டு எழுந்து போனான்! இவள் எண்ணிப்பார்த்து பணத்துடன் ஆடையை சரிசெய்துகொண்டு.. கடைக்கு போகிறாள்.. பால்பவுடர் வாங்குகிறாள்! அவள் வருவதற்குள் பசி தாளாமல் குழந்தை அழுது கொண்டேயிருக்கிறது!
-வே.கல்யாண்குமார்