tamilnadu epaper

உதவிக்கரம்

உதவிக்கரம்


         கஸ்தூரி 'கார்மெண்ட்ஸ்' கம்பெனியில் சூப்பர்வைசர் ஆக வேலை பார்க்கிறாள். ஐந்துமாத கர்பிணி . ஸ்கேன் எடுக்க இன்று காலை பத்துமுப்பது மணிக்கு அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்தாள்.

      பஸ்'யை விட்டு இறங்கிய கஸ்தூரி, பிரேமா' ஸ்கேன் சென்டர் ' யை நோக்கி சென்று கொண்டிருந்தாள். எதிரில் வந்துகொண்டிருந்த வயதான பெண்மணி 

திடீரென மயங்கி கீழே விழுந்தாள். சுற்றியிருந்தோர் வாய் அளவில் அனுதாபப்பட்டனரே தவிர யாரும் உதவிட

முன்வரவில்லை. கஸ்தூரி அந்த பெண்மணியை ஆட்டோவில் ஏற்றி அருகில் இருந்த 'ஹாஸ்பிடல்' ல் சேர்த்தாள். அட்வான்ஸ் பத்தாயிரம் பணம் கட்டினால் தான் அடுத்த கட்ட 'ட்ரீட்மெண்ட்'டே ஆரம்பிப்பதாக சொன்னதால், தன்னிடம் இருந்த பணத்தை கட்டினாள்.

          நேற்று கஸ்தூரி தன் மருத்துவ

செலவுக்காக நகையை அடமானம் வைத்து

வாங்கிய பணம்தான் அது.

          கஸ்தூரி, அந்த அம்மாவின் ' ஹேண்ட்பேக்' ல் அந்தம்மா பற்றிய தகவல் ஏதேனும் இருக்கிறதா என்று தேடினாள். உள்ளே உள்ள பர்ஸில் இருந்த போட்டோவை பார்த்தவுடன் திடுக்கிட்டாள்.

          ' நம்ம முதலாளி போட்டோ... ஒரு வேல இந்த அம்மா முதலாளி உடைய சொந்த அம்மாவா இருப்பாங்களோ... எதற்கும் முதலாளிக்கு 'கால்' பண்ணுவோம்...' போன் செய்த அரை மணி நேரத்தில் வந்துவிட்டார்.

          " சார் இந்த பொண்ணு மட்டும் உங்க அம்மாவ சரியான நேரத்துல கொண்டு

வரல...உங்க அம்மா பிழைக்கிறது கஷ்ட்டம்தான்... அதுமட்டும் இல்ல சார் அட்வான்ஸ் பணம் பத்தாயிரம் வேற கட்டியிருக்கு... உண்மையிலேயே அந்த பொண்ணுக்கு பெரியமனசு..." 'ஹெட் நர்ஸ்'

சொன்னவுடன்,

        " சாரி கஸ்தூரி... என்ன மன்னிச்சிடு....

 நீ உன் மெடிக்கல் செலவுக்கு சம்பள பணத்துல அட்வான்ஸ் கேட்ட ... நான் என் கம்பெனியில வேலசெய்ற உனக்கே கறாரா இல்லன்னு மறுத்துட்டேன்... ஆனா நீயோ முன்ன பின்னதெரியாத எங்க அம்மாவுக்கு இவ்வளவு உதவி பண்ணிருக்க...ரொம்ப நன்றிம்மா... இந்தா இதுல இருபதாயிரம்

இருக்கு எங்க அம்மாவுக்காக கட்டுன

பத்தாயிரம் போக மீதி பத்தாயிரத்த உன் மெடிக்கல் செலவுக்கு இனாமா வச்சிக்க..."

            "சாரி சார்...தப்பா நினைக்காதீங்க...

இனாமா வேணாம் அட்வான்ஸா வச்சிக்கிறன் ...சம்பளத்துல பிடித்தம் பண்ணிக்கீங்க...பணத்தை வாங்கி கொண்டு 'ஸ்கேன் சென்டர்' யைநோக்கி நடந்தாள். முதலாளி ஏதும் பேச முடியாமல் வெட்கி நின்றார்.



-சுகபாலா,

திருச்சி.