கோயம்புத்தூர் மாநகரின் முக்கிய ஊர்களுள் ஒன்று சிங்காநல்லூர்.
சிங்காநல்லூரின் அடையாளங்களில் ஒன்று செண்ட்ரல் ஸ்டுடியோ. சிங்காநல்லூரில் திருச்சி சாலையில் அமையப்பெற்ற சென்ட்ரல் ஸ்டுடியோ என்ற சினிமா படப்பிடிப்பு வளாகம் சாமிக்கண்ணு வின்சென்ட் மற்றும் எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு ஆகியோரால் 1930களில் நிறுவப்பட்டது. அன்றைய காலகட்டத்து உச்ச நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன 1945 காலகட்டங்களில் செண்ட்ரல் ஸ்டியோவில் பணியாற்றிய தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிங்காநல்லூர் பகுதியில் குடியிருந்தார். அதே காலகட்டத்தில் பிரபலமான லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஸ்ரீராமலு நாயுடு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட இடமும், அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் வரவேற்பு அளிக்கப்பட்ட இடமும்.சென்ட்ரல் ஸ்டூடியோ வளாகம்தான்.
தென்னக மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்ட கோயம்புத்தூரில் ஒரு காலத்தில் அதில் பஞ்சாலைகளைக் கொண்டிருந்த பகுதிதான் சிங்காநல்லூர். ஒரு காலத்தில் இந்தப் பகுகியில் 12 ற்கும் மேற்பட்ட பஞ்சாலைகள் இயங்கி வந்திருக்கிறது.
சிங்காநல்லூர் பகுதி மேம்பாலங்களால் சூழப்பட்டது. அதன் கிழக்கு பகுதியில் ஒண்டிப்புதூர் மேம்பாலம், வடக்கு பகுதியில் ஹோப் காலேஜ் மேம்பாலம், தெற்கு பகுதியில் வெள்ளலூர் சாலை மேம்பாலம், மேற்கு பகுதியில் அல்வெர்ணியா மேம்பாலம் ஆகியவை போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க கட்டப்பட்டு உள்ளன.
கோவை மாநகரம் நீர் நிலைகளால் சூழப்பட்ட எளிழான நகரம். இங்குள்ள பத்து குளங்களில் ஒன்று சிங்காநல்லூர் குளமாகும். கோவையில் 19ம் நூற்றாண்டு பிற்பகுதியில் ப்ளேக் நோய் என்னும் கொடிய காய்ச்சல் பரவியது. இதனால் அந்த நோயை தீர்க்கும் விதத்தில் ப்ளேக் மாரியம்மன் திருக்கோயில் இக்குளத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.
மகாபாரதத்தில் முக்கியமானதாக கருதப்படுவது குருசேத்திரப் போர். பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற போரில், பாண்டவர்கள் வெற்றிபெறுவதற்கு முக்கியமான காரணமாக இருந்து களப்பலி கண்டவன் அரவான்
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றியடைய வேண்டுமானால் சாமுத்திரிகா லட்சணம் கொண்ட ஒரு இளைஞனை களப்பலி கொடுக்க வேண்டும் என்று சொன்னதைக் கேட்டார் கிருஷ்ணர்.
பாண்டவர் அணியில் சாமுந்திரிகா லட்சணம் பொருந்தியவர்கள் மூன்று பேரே. அவர்கள் கிருஷ்ணர், அர்ச்சுனன், அரவான். அர்ச்சுனன் இல்லையேல் போர் இல்லை. கண்ணன் இல்லையேல் உலகமே இல்லை. அதனால் எஞ்சியிருக்கும் அரவானை சந்தித்தார் கிருஷ்ணன். போரில் வெற்றி பெறுவதற்காக தனது உயிரை தியாகம் செய்வதாக அரவானிடம் இருந்து வாக்குறுதி பெற்றார். அதே நேரத்தில் இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான் அரவான். ஒன்று தான் திருமணம் செய்து கொண்டு ஓரிரவாவது குடும்பம் நடத்த வேண்டும். அடுத்தது, இரண்டாவது தான் களப்பலி ஆனதும், வெட்டுப்பட்ட என் தலை போர் முடியும் வரை, போரில் நடைபெறும் காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும் என்றான். கிருஷ்ணர் ஒப்புக் கொண்டார். கிருஷ்ணரின் லீலைப்படி பொங்காளியம்மாள் என்ற அழகிய பெண்ணை அரவான் கந்தர்வ மணம் புரிந்து, அவளோடு களிப்புற்றான். மறுநாள் காலை தன் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக களப்பலி கண்டான். போர் நடைபெற்ற 18 நாட்களம் அரவானின் தலை உயிர்ப்புடன் இருந்து கண்டுகளித்தது.
இந்த அரவானின் களப்பலியை நினைவூட்டும் விதமாக, ஆண்டுதோறும்
கார்த்திகை மாதத்தில் சிங்காநல்லூரில் அரவான் விழா கொண்டாடப்படுகிறது. நகரத்தில் நடக்கும் திருவிழாக்களில் இது மிகப்பெரியது. இ
சிங்காநல்லூர் கோயில்களால் சூழப்பட்டது. இதன் தென் பகுதியில் செல்லாண்டி அம்மன் கோயிலும், அரவான் கோயிலும், உலகளந்த பெருமாள் கோயிலும் அடுத்தடுத்து அமையப் பெற்றிருக்கிறது.
எஸ்.சசிகலா,
சென்னை