tamilnadu epaper

எங்கள் ஊர் அந்தநல்லூர் சிறப்புகள்

எங்கள் ஊர் அந்தநல்லூர் சிறப்புகள்

எங்கள் ஊர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆகும்..இங்குள்ள கல்வெட்டுகளின்படி இது முன்பு ஆண்டவநல்லூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊராட்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்

 

 

 

அந்தநல்லூர் உள்ள  வட தீர்த்தேசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயிலைப் பற்றி சேக்கிழார் எழுதியிருப்பதால், பெரியபுராணம் காலத்திலிருந்தே இத்தலம் புண்ணிய ஸ்தலமாகவும், கோயிலாகவும் இருந்து வருகிறது. திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து 1 கிமீ தொலைவில் உள்ள அந்தநல்லூரில் இக்கோயில் உள்ளது. ஆலந்துறை இன்று “அந்தநல்லூர்” என்ற நாமத்தால் விளங்குகின்றது. இறைவன் வட தீர்த்தேசுவரர் என்றும் ஆலந்துறை மகாதேவர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி பாலசுந்தரி என்றும் பால சௌந்தர நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். பராந்தக சோழன் காலத்திய கற்றளியாக இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். 25.08.2008-ல் மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றுள்ளது. 

 

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்; 

 

• அந்தநல்லூர் 

 

• அல்லூர் 

 

• உத்தமர்சீலி 

 

• எட்டரை 

 

• கம்பரசம்பேட்டை 

 

• கிளிக்கூடு 

 

• குழுமணி 

 

• கொடியாலம் 

 

• கோப்பு 

 

• திருச்செந்துறை 

 

• திருப்பராய்த்துறை 

 

• பழூர் 

 

• பனையபுரம் 

 

• புலியூர் 

 

• பெட்டவாய்த்தலை 

 

• பெரியகருப்பூர் 

 

• பெருகமணி 

 

• பேரூர் 

 

• போசம்பட்டி 

 

• போதாவூர் 

 

• மருதாண்டாக்குறிச்சி 

 

• மல்லியம்பத்து 

 

• முத்தரசநல்லூர் 

 

• முள்ளிக்கரும்பூர் 

 

• மேக்குடி

 

 

அந்தநல்லூரில் படலாண்டியம்மன் கோவில் உள்ளது.இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது 

 

இக்கோயிலில் படலாண்டியம்மன் சன்னதியும், மலையாள சுவாமி உபசன்னதியும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது 

 

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் காப்புகட்டு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் திருகார்த்திகை திருவிழாவாக நடைபெறுகிறது.

 

குட்டி முத்துச்செல்வம் சிவகாமிபுரம்