உடுமலைப்பேட்டை (ஆங்கிலம்:Udumalaipettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை வட்டம் மற்றும் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வு நிலை நகராட்சியும் ஆகும். இந்த நகராட்சிதான் மாவட்டத்திலேயே மிகப்பெரிய நகராட்சி ஆகும். உடுமலைப்பேட்டையில்தான் தமிழக அரசின் சார்பில் சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த சர்க்கரை ஆலையின்மூலம் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் சர்க்கரை தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது. வெளிமாவட்டங்களுக்கு சர்க்கரை ஏற்றி செல்ல ஆலையின் அருகாமையிலேயே ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த உடுமலைப்பேட்டை வட்டாரத்தில் கரும்பு சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மத்திய அரசின் சைனிக் பள்ளி இங்கு அமைந்துள்ளது.
கடந்த காலங்களில் சக்கரகிரி என்று அழைக்கப்பட்ட உடுமலையானது இராண்டாயிரம் ஆண்டு கால வரலாற்றைக் கொண்டு விளங்குகிறது. கிழக்கே பழனி மலையையும், மேற்கே ஆனைமலையையும், வடக்கே செஞ்சேரி மலையையும், தெற்கே திருமூர்த்தி மலையையும் கொண்டு இவற்றிக்கு ஊடே இருப்பதால் உடுமலை என்றுபெயர் பெற்றது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் இந்த நகரம் தளி பாளையப்பட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது. உடுமலை நகரில் பல்வேறு சிறப்பு மிக்க கோவில்கள் உள்ளன. மிகப்பழைமையான சித்தாண்டீஸ்வரர் கோயில் உடுமலை நகரில் உள்ளது.
தெற்கே லிங்கம் உள்ளது, இந்த நகரின் சிறப்பாகும். தளி பாளையப்பட்டு பொறுப்பில் இருந்து சித்தாண்டீஸ்வரர் கோயிலுக்கு பூமி தானமிடப்பட்டது, கோவிலை பராமரிப்பது முதலியவற்றை தெரிவிக்கும் செப்புபட்டையம் தளி பாளையப்பட்டு எத்தலப்ப நாயக்கரால் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது.
கோயில்கடவு, கொழுமம், கணியூர், கடத்தூர், காரதொழுவு என பல்வேறு இடங்களில் மிகப் பழமையான சிவன் கோயில்கள் உள்ளன்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மூன்று பக்கம் மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டுள்ளது.
கிழக்கே தமிழனின் முதல் கடவுளான பழனி முருகன் எழுந்தருளியிருக்கும் பழனியும், மேற்கே ஆணைமலையில் உள்ள மாசாணியம்மணும் அமையப்பெற்றது.
உடுமலைப்பேட்டை நகராட்சியாக 1918 ஆண்டு தரம் பெற்றது.
இரண்டாம் தரம் 1970 ஆண்டும் முதல் தரம் 1979 ஆண்டு பெற்றது.
இதனுடைய மொத்தபரப்பளவு 7.41 km இதில் நகர்புறம் 6.582 எனவும் ,0.828 km 1 கிராமபுறம் எனவும் கொண்டது.
உடுமலைப்பேட்டை முதலில் கோவை மாவட்டத்துடன் இனணந்து இருந்தது.
பின்பு பல காரணங்களால் திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு அதனுடன் உடுமலைப்பேட்டை ஒரு நகராட்சியாக இணைந்தது இதனை பல உள்ளூர் மக்கள் எதிர்த்தனர். திருப்பூர் மாவட்டத்தில் பழமையான நகராட்சி என்ற பெருமை உடுமலையையே சேரும். உடுமலை ஒரு தொழில் நகரமாகவும் மற்றும் விவசாயம் செய்யும் வகையிலும் உள்ளது.
உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஐவர் மலை சமணர்கள் வாழ்ந்த மலையாக இருந்திருக்கிறது.
குடிமங்கலம் பொள்ளாச்சி தாராபுரம் சாலை - உடுமலை பல்லடம் சாலை சந்திப்பில் உள்ள ஓர் அரசு மருத்துவமனை வளாகத்தில் காணப்படும் கல்வெட்டில் அச்சுதராய மன்னர் 16 - ஆம் நூற்றாண்டில் பொதுநன்மைக்காக பிராமணர் சத்திரங்களை ஏற்படுத்தி அவற்றுக்கு பூளவாடி, குடிமங்கலம் என்று பெயரிட்டதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
உடுமலைப்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் வழிபாட்டுமுறைகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன
உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள முக்கிய சுற்றுலா தளங்கள்
திருமூர்த்தி மலை
உடுமலைப்பேட்டை சுற்றுலா தளங்களில் முதலில் பார்க்க வேண்டியது திருமூர்த்தி மலை தான். உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டரில் அமைந்துள்ளது திருமூர்த்தி மலை. இங்கு பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில், திருமூர்த்தி அணை, சிறுவர்கள் நீச்சல் குளம், சிறிய பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களை கொண்டு திருமூர்த்தி மலைக்கு பெருமையை சேர்க்கிறது.
அமராவதி அணை
அமராவதி அணை உடுமலையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணை சுமார் 100 படிக்கட்டுகளை கொண்டுள்ளது. அதில் ஏறி மேலே சென்று இயற்கையை ரசித்தால் உங்கள் அணைத்து கவலைகளும் பறந்து ஓடி விடும்.
அருகிலேயே முதலை பண்ணை, பெரிய பூங்கா, மீன் கடைகள் எல்லாம் உங்கள் பொழுதை மேலும் அழகாக்கும். இந்த இடத்திற்கு வர பேருந்தை விட சொந்த வாகனம் சரியாக இருக்கும்.
புகழ்பெற்ற மனிதர்கள்
தொகு
உடுமலை நாராயணகவி தமிழ்த் திரைப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர்.
சாதிக்பாட்சா முன்னாள் அமைச்சர்.
கவுண்டமணி பிரபல நகைச்சுவை நடிகர்.
அனுப்பியவர் பெயர் மற்றும் முகவரி:
வ. வாசுதேவன்,
நங்கநல்லூர்,
சென்னை 600 061.