tamilnadu epaper

எங்கள் ஊர் கலவை சிறப்புகள்

எங்கள் ஊர் கலவை சிறப்புகள்

 

எங்கள் ஊர் கலவை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.கலவை நகரம் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது

.கலவை, காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 43 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும், ஆற்காட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது. 

 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்வளம், நிலவளம், தனவளம், தானியவளம் பொருந்திய கன்னல், சென்னல், கதலி, கமுக, தேங்கு ஆகிய பஞ்ச சலனங்கள் பொருந்திய கலவை நகரத்துக்கு பண்டையகாலத்தில் சதுர்வேதமங்கலம் என்றும் பெயர் இருந்ததாக கூறப்படுகிறது.மூவேந்தருக்கு கீழ் பல்லவ சங்கணத்தரசர் ஆண்ட காலத்தில் சந்தனக்காடு இருந்தமையால் கலவை நகர் என பெயரும் உண்டாயிற்று என்றும் கூறப்படுகிறது. 

 

இந்நகருக்கு  சென்னசமுத்திரம் மதுரா மாந்தாங்கல் குளக்கரையின் அருகாமையில் அரண்மனையில் அரசன் வசித்து வந்தார். அரசனுடைய பசுவானது சந்தன விருட்சத்தின் கீழ் உள்ள புற்றின் மேல் தினசரி பால் சுரந்துவிட்டு, சென்றுவிடும். பசு கொட்டகையில் இல்லாததை கண்டு காவலர்கள் கூற, அப்பசுவை சோதிக்க அரசன் பசுவை பின்தொடர, பசு புற்றில் பால் சுரப்பதை கண்டு வியந்தார்.பின்னர் அரசன் புற்றில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு சிவலிங்கத்தை வணங்கி எனக்கு ஆண் வாரிசு வேண்டுமென்று முறையிட்டார் ஈஸ்வரன் காட்சிதந்து அரசனுடைய பெண்மகளை ஆண்மகன் ஆக்கினார். உடனே அரசன் கோட்டையில் கோயில் கட்டி பூஜைகள் செய்து வழிபட்டார். அந்த ஈஸ்வரர் தான் தர்மசவர்த்தினி சமேத காரிசநாதராக அருள்பாலிக்கிறார். கலவையில் கமலக்கண்ணியாக அருள்பாலிக்கும், கமலக்கண்ணியம்மன் செஞ்சிக்கோட்டையை ஆண்ட மன்னர் பரம்பரையின் குல தெய்வம். செஞ்சிக்கோட்டையில் கமலக்கண்ணி அம்மனுக்கு தனி கோயில் உண்டு.

செஞ்சியை ஆண்ட ராஜாதேசிங்கு போர்புரிய படையெடுத்து செல்வதற்கு முன் இக்கோயிலுக்கு சென்று அம்மன் சன்னிதியில் தன் வாளை வைத்து வணங்கி விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு காலகட்டத்தில் ஆற்காடு நவாப் செஞ்சிக்கோட்டை மீது படையெடுத்து சென்று கோட்டையை கைப்பற்றிக் கொண்டார். அங்கு இருந்த கோயிலை இடித்து சாமி சிலைகளை அழித்து விட்டார்கள். கமலக்கண்ணியம்மன் கோயிலை இடிக்க முற்பட்டபோது மலைத்தேனீக்கள் படையெடுத்து வந்து படைவீரர்களை தாக்க அவர்கள் கோயிலை இடிக்கும் முயற்சியை கைவிட்டனர். பகைவர்களின் படையெடுப்பால் செஞ்சிக்கோட்டை சிதைந்து விட்ட நிலையில் கமலக்கண்ணியம்மன் கோயில் மட்டும் பகைவரிடம் இருந்து தப்பியது.செஞ்சிக்கோட்டை அழிவுக்கு பிறகு மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்கள் கலவைக்கு வந்தனர். அவர்கள் புறப்படும் முன்பு கமலக்கண்ணி கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து வந்து கலவையில் கமலக்கண்ணி கோயிலை சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் கட்டி முடித்தனர். இக்கோயிலில் நீண்டகாலம் குழந்தை இல்லாத தம்பதியர்கள் கலவை கமலக்கண்ணி கோயிலுக்கு வந்து தங்களது பெயரில் அர்ச்சனை செய்து, அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் உண்டாவதாக நம்பிக்கை. குழந்தை வரம் கிடைத்தவர்கள் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை குழந்தையுடன் கோயிலுக்கு வந்து பால்குடம் எடுத்தும், கூழ்வார்த்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் கருவறை முன்பு 8 திருக்கரங்களுடன் பெரியாண்ட நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மூலவருக்கு நடைபெறுவதை போலவே பூஜைகள் நடைபெறும். ஏவல், பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அம்மனிடம் பிரார்த்தனை செய்வார்கள். 

 

15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 53 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி ஆற்காடு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,343 வீடுகளும், 9,773 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.64% என்பதாகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1040 பெண்கள் என்றுள்ளது. 

 

கலவை காஞ்சி சங்கர மடத்தின் கிளையில், 66 & 67-வது ஆச்சாரியர்களின் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள், கலவையில் துறவற தீட்சை எடுத்துக் கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் 68-வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார். 

 

கலவை பேரூந்து நிலையம் அருகே, சங்கர மடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது.

இவ்வூரின் அமைவிடம்  கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் இருக்கின்றது. 

 

கலவை பேரூராட்சி கீழாண்டைபேட்டையில் வேலூர் மாவட்ட கிளை நூலகம்  பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை கலவை மற்றும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சொரையூர் ஆற்றிலிருந்து  கிணறு மூலம் கலவை பேரூராட்சிக்கு 2 லட்சம் கொள்ளளவில் தரைதளம் கிணறு அமைக்கப்பட்டு, தினசரி  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

 

 

 

எங்கள் கலவையில் கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது.இக்கோயிலில் கரிவரதராஜபெருமாள், பெருந்தேவி தாயார் சன்னதிகளும், ஆண்டாள், ஆஞ்சநேயர், நவகிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. நவராத்திரி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. கிருஷ்ணஜெயந்தி மாதம் திருவிழா நடைபெறுகிறது. 

 

பல ஆன்மிகத்தலங்களை தன்னகத்தே கொண்ட கலவை பேரூராட்சியானது 4 சதுர கிலோமிட்டர் பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சி15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களைக்கொண்டுள்ளது. 54 தெருக்களையும் கொண்டது இப்பேரூராட்சி.