புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான ஒகேனக்கல் அமைந்திருக்கும்
ஊராட்சிதான்
எங்க கூத்தப்பாடி கிராமம். அப்போதும் இப்போதும் எப்போதும் கூத்துக்கலைக்கு பெயர்பெற்ற நாடகக் கலைஞர்கள் அதிகமானவர்கள் கூத்துக்கலையை வளர்த்துவந்த காரணத்தால் எங்கள் ஊருக்கு கூத்தப்பாடி என்று பெயர் வந்திருப்பதாக முன்னோர்கள் சொல்லியதையும்,
தற்போதைய நடைமுறையையும் வைத்து கூத்தப்பாடிக்கான என்ற பெயர் காரணத்தை அறிகிறோம்.
ஏறக்குறைய நான்காயிரம் மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய கிராமம் கூத்தப்பாடி.
கிராமத்தில் உள்ள இளைஞர்கள் மிகப்பெரிய ஆற்றல் பெற்றவர்களாக விளையாட்டு, கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு என அனைத்திலும் சிறந்து விளங்கும் காளையர்களைக் கொண்ட கிராமமாக விளங்குகிறது. கூத்தப்பாடி ஊராட்சிக்கு
உட்பட்ட சுற்றுலா தலம்தான் ஒகேனக்கல்.
கூத்தப்பாடி மண்டு என்று சொல்லப்படும்
இடத்தில் இருக்கும்
நூற்றாண்டு
பழமை வாய்ந்த ஆலமரம் ஊருக்கு அழகு சேர்க்கிறது.
ஊரின் நுழைவுப் பகுதியில் ஒரு பக்கம் முனியப்பன் சுவாமியும் மற்றொரு பக்கம் துரௌபதி அம்மன் ஆலயமும் ஊருக்கு வழிக்காட்டும் ஆலயங்களாக இருக்கிறது. மற்றொரு பக்கம் ஊரின் மையப்பகுதியில் கிராமத்து மக்கள் கூடுகின்ற இடமாக மண்டு, வனம் சொல்லக்கூடிய இடங்கள் மக்களை ஒன்று சேர்க்கிறது.
ஏரி, குளம், கண்மாய் என்று ஊருக்கு அழகு சேர்க்கும் இடங்களும் நீர்நிலைகள் உயர்வதற்கான நீர் சேகரிப்பு நிலையங்களும் முன்னோர்கள் அழகாக கட்டமைத்து வைத்து சென்றுள்ளார்கள்.
அனைவருக்கும் கல்வி என்ற இலக்கை நோக்கி கிராமத்து மக்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைத்துவருகிறார்கள்.
விவசாயமும், கால்நடை வளர்ப்பும் பிரதான தொழில்களாக இருந்து வருகிறது.
வனமும், வனம் சார்ந்த இடங்களில்
மக்களின் வாழ்வியல் முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கிறது.
கிராமத்து இளைஞர்கள், பொதுமக்கள், ஊர் பிரமுகர்களுடன் பொங்கல் மற்றும் பிற விழாக்களை ஒன்று திரண்டு
தமிழர் பண்பாட்டோடு கொண்டாடி வருவது மற்ற பகுதி மக்களுக்கு கூத்தப்பாடி கிராமம் முன்னுதாரணமாக
இருந்து வருகிறது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
கூத்தப்பாடி இளைஞர்களின்
ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்கள் பல போட்டிகளில் வெற்றி பெற்று வருவது இளைஞர்கள் மத்தியில் புது உத்வேகம் உருவாகி
வருவதற்கு விளையாட்டு
இன்றியமையாததாக
இருக்கிறது.
கூத்தப்பாடி மா.பழனி
தருமபுரி