tamilnadu epaper

எங்கள் ஊர் சிறப்பு

எங்கள் ஊர் சிறப்பு

எனது சொந்த ஊர் களக்காடு

 

 

பெயர் காரணம். வரலாறு

 

ஆதி காலத்தில். கிளா மரங்கள்

 

நிறைந்து காணப்படும் ஊராக

 

இருந்த காரணத்தால் கிளாகாடு

 

என்பது மருவி களக்காடு என ஆனது

 

இந்த ஊர் ராமாயணதோடு 

 

தொடர்பு கொண்டது. இங்குள்ள

 

வனப்பகுதியில் இருந்து தான்

 

ராமர் சீதையை விஸ்வாமித்திரர்

 

அழைத்து கொண்டு பட்டாபிஷேகம்

 

போனதாக வரலாறு உண்டு

 

 

கோவில்கள்

 

 

    இங்கு பாண்டிய மன்னர்கள்

 

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு

 

முன்பு கட்டிய பெரிய கோவில்

 

வீரமார்தேண்டஸ்வரர் கோவில்

 

 

புகழ் பெற்றது. இவை தவிர

 

பழமையான. பெருமாள் கோவில்

 

கிருஷ்ணன் கோவில் நினைத்ததை

 

முடித்த விநாயகர் கோவில் உள்ளது 

 

 

பெரிய கோவிலில் அழகிய சிற்பங்க்

 

களும். கல் மண்டபங்கள் ஓவியங்கள்

 

நிறைந்த. சிவன் கோவில் ஆகும்

 

சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக

 

உள்ளது

 

 

மசூதி. மற்றும். சர்ச்சுகள்

 

 

    இங்கு ஆற்றை ஒட்டி உள்ள 

 

மசூதி. மிகவும் பழமையானது

 

 

இங்கு. பொது மக்களின் கோரிக்கை

 

கள். நிறைவெருவதால் கூட்டம்

 

அதிகமாக இருக்கும்

 

புது தெருவில் உள்ள தேவாலயம்

 

மிகவும் பிரசித்தி பெற்றது 

 

இவை தவிர எண்ணற்ற கோவில்கள்

 

உள்ளது. இங்குள்ள அகலிகை

 

சாபம் தீர்த்த சாஸ்தா கோவில் 

 

மிகவும் சக்தி வாய்ந்தது. ராமர்

 

அகலிகையின் சாபம் நீக்கிய

 

இடமாகும்

 

 

   நதிகள். அருவிகள்

 

 

இங்கு பாயும் நதியின் பெயர்

 

கவுதம நதி ஆகும். கவுதம முனிவர்

 

இந்த பகுதியில் தங்கியதால் 

 

இந்த பெயர். இங்கு. கோலிக்கால் 

 

தேங்காய் உருளி. கருங்கல் கசம் 

 

 

போன்ற அருவிகள் உள்ளன 

 

தலையணை அருவிக்கு செல்ல

 

போக்குவரத்து வசதி உள்ளதால்

 

பொதுமக்கள் சுற்றுலா வாசிகள்

 

அடிக்கடி வந்து செல்கின்றனர்

 

இவை அனைத்தும் வனத்துறை

 

கட்டுபாட்டில் உள்ளது

 

 

   கல்வி நிலையங்கள்

 

இங்குள்ள இ. சி.எம் பள்ளி. 

 

ஆங்கிலேயர் காலத்தில் கட்ட பட்டது

 

தற்போது. இது மகளிர் மேல் நிலை 

 

பள்ளியாக உள்ளது. இவை தவிர

 

அரசு மேல் நிலை பள்ளி. மீராணியா

 

மேல் நிலை பள்ளி. செயல் படுகிறது

 

 

தொழில் மற்றும் உணவு

 

 

   இங்கு விவசாயம் பிரதானம்

 

நெல். வாழை. அதிக அளவில்

 

பயிரிட படுகிறது. இங்கு வாழைக்காய்

 

மண்டி. உள்ளது. இங்கு இந்து

 

மக்கள் கூட்டான் சோறு செய்வதில்

 

கை தேர்ந்தவர்கள். பொங்கல்

 

மறுநாள். சோற்றை கட்டி கொண்டு

 

ஆவுடையார் தோப்பு மற்றும்

 

அருவி கரைக்கு செல்வதை

 

வழக்கமாக கொண்டுள்ளனர்

 

 

   மருத்துவ வசதி

 

இங்கு அரசு மருத்துவ மனை

 

பெல்ஜியம் அரசு மருத்துவ மனை

 

இதர தனியார் மருத்துவ மனைகள்

 

நிறைய உள்ளன 

 

 

நீர் நிலைகள்

 

   இங்கு ஒரு ஆறும். தாமரைக்குளம்

 

தலையணை. நெட்டேறியங்கால்

 

மற்றும் அருவிகள் உள்ளது

 

தொழில்

 

 

    முஸ்லிம்கள். பாய் முடைதல்

 

விவசாயம் முக்கிய தொழில் ஆக

 

உள்ளது. இங்கு இருந்து பல

 

இடங்களுக்கு வாழைக்காய் தார்

 

ஏற்றுமதி செய்ய படுகிறது

 

 

திருவிழாக்கள்

 

 

   இங்குள்ள சத்யவாகீஸ்வரார்

 

கோமதி அம்மன் கோயில் தேர்

 

திருவிழா மிகவும் சிறப்பு. இவை

 

தவிர. ஊரின் நடுவில் உள்ள

 

தெப்ப உற்சவம் மூன்று நாட்கள்

 

மிக சிறப்பாகநடை பெரும்

 

 

கந்தூரி விழாவில் சந்தனக்கூடு

 

ஊர்வலம் சிலம்பாட்டதுடன் வெகு

 

விமர்சையாக நடை பெறுகிறது 

 

 

இயற்க்கை மருத்துவம்

 

 

 இங்குள்ள மஞ்சுவிளை கிரானியார்

 

வர்மகலைக்கு பெயர் போனவர்

 

தற்போது வாரிசுகள் செய்து

 

வருகின்றனர். புது தெருவில்

 

முன்னர் இருந்த டாக்டர் முத்தையா

 

அவர் மகன் டாக்டர் ராஜ்குமார்

 

ஹோமியோபதி மருத்துவத்தில்

 

சிறந்து விளங்கினர்

 

 

முடிவுரை

 

 

களக்காடு மிகவும் தொன்மையான

 

பழமை மாறாமல். உள்ள அழகிய

 

ஊராகும். மிக குறுகிய காலத்தில்

 

அசுர வளர்ச்சி அடைந்து இன்று

 

நகராட்சியாக விளங்குகிறது

 

 

நடேஷ் கன்னா

 

கல்லிடைக்குறிச்சி

 

நெல்லை மாவட்டம்