tamilnadu epaper

எங்கள் ஊர் தக்கலை சிறப்பு

எங்கள் ஊர் தக்கலை சிறப்பு

தக்கலை, திருவாங்கூர் மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.  கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் தக்கலையும் ஒன்று    
தக்கலையில் இருந்து சற்று தூரத்தில் பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது .இந்த அரண்மனை கி.பி.1592 – 1609 ல் திருவாங்கூரை ஆண்ட இரவி வா்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ல் கட்டப்பட்டது. திருவாங்கூா் மன்னா்களின் ராஜிய உறைவிடமாக இந்த அரண்மனை திகழ்ந்தது. கி.பி. 1795 வரை பத்மநாபபுரம் திருவாங்கூரின் தலைநகரமாக திகழ்ந்தது. இந்த அரண்மனை வளாகம் 185 ஏக்கரில் மேற்கு தொடா்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள வேலி மலையில் உள்ளது.
தக்கலை அருகில் உள்ள குமாரகோவிலில் பிரசித்திபெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்து செல்வது வழக்கம்
.  தக்கலை பீர் முகம்மது அப்பா, காலத்தால் மூத்த தமிழக சூபிக் கவிஞர் ஆவார். அப்பா என மரியாதையுடன் அழைக்கப்பட்டார். சிறந்த இறைநேசச் செல்வர். திருக்குர் ஆனின் உன்னத புகழ் அனைத்தையும் தம் மெய்ஞானக் கவிதைகளின் வாயிலாக மக்களுக்குத் தந்தவர்.அவரின் நினைவு தர்காவும் அங்கு உள்ளது .
இவ்வூரின் அருகில் குமாரகோவிலில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள். உள்ளன.
மேலும் அருகில் உள்ள வில்லுக்குறியில் மேம்பால பாசன வாய்க்கால் வித்தியாசமான கட்டுமான அமைப்பை கொண்டது.
தக்கலையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் மாத்தூரில்  மிகவும் பிரசித்தி பெற்ற தொட்டிப்பாலம் உள்ளது 
மாத்தூர் தொங்கு பாலம் நீங்கள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு அற்புதமான காட்சி. அடிப்படையில் நீர்ப்பாசன நோக்கங்களுக்காக நீர் கொண்டு செல்வதற்கான நீர்வழியாக கட்டப்பட்ட மாத்தூர் தொங்கு பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான மற்றும் நீளமான தொட்டி பாலமாகும்.
இந்த பகுதி செவ்வாழை,ஏத்தன் ,மட்டி போன்ற வாழைப்பழங்களுக்கும்,பலாப்பழங்களுக்கும் பிரசித்தி பெற்ற இடமாகும்.
அனுப்பு 
எ .முகமது ஹுமாயூன் 
நாகர்கோவில் 629001
 போன் 9894076286