tamilnadu epaper

எங்கள் ஊர் தளி சிறப்புகள்

எங்கள் ஊர் தளி சிறப்புகள்

 

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய ஊர்தான் எங்கள் தளி நகரமாகும்.

தளி நகரம், தமிழ்நாடு - கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவிலும், கிருஷ்ணகிரியிலிருந்து 78 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

எங்கள் ஊரில் கன்னிகா பரமேஸ்வரி ஆலயம் உள்ளது.இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் 1 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.தளியில் அமைந்துள்ள வேணுகோபால சுவாமி கோயில் கிருஷ்ணரின் அவதாரமான வேணுகோபாலருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இந்த கோயில் ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் புகழ்பெற்ற தேர் திருவிழா நடைபெறும்.தளி  ஊராட்சியானது , தளி சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தமிழக- கர்நாடக மாநில எல்லையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி (தனி) சட்டமன்ற தொகுதி உள்ளது. லிட்டில் இங்கிலாந்து என்று அழைக்கப்படும் குளிர் பிரதேசமான தளி தொகுதி காடுகள் மலைகள் மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் கொண்ட தொகுதியாக திகழ்கிறது. 

 

தளி சட்டமன்றத் தொகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டையில் 5000 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சவுந்தரவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோவில் உள்ளது. 

 

சுவாமிமலையில் இளநீரில் விளக்கு எரியும் கோயில் உள்ளது மேலும் யாரப் தர்கா சிறப்பு வாய்ந்ததாகும். தளிப்பகுதியில் காய் கறிகள், கீரைகள், மற்றும் மலர்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. 

 

தளி தொகுதி, 1977-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வரை உத்தனப்பள்ளி தொகுதியில் ஒரு அங்கமாக தளி இருந்து வந்தது. பின்பு தொகுதி மறுசீரமைப்பில் உத்தனப்பள்ளி தொகுதி நீக்கப்பட்டு 1977-ல் தளி தொகுதி உதயமானது.

இத்தொகுதியில் காடுகள் நிறைந்த மலை கிராமங்கள் அதிக அளவில் உள்ளன விவசாய நிலங்கள் ரோஜா தோட்டங்கள் வன விலங்குகள் அதிக அளவில் இருக்கின்றன. சிறு குறு தொழிற் சாலைகளும் உள்ளன.

தளி சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழைவது இந்த தொகுதியில்தான். ஒகேனக்கல் வழியாக மேட்டூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்ட விவசாய நிலங்களை வளம் கொழிக்கச் செய்யும் காவிரி ஆறு ஓடுகிறது.காவேரி ஆற்று நீரை அளக்கும் இடமான பிலிகுண்டுலு இத்தொகுதியில் உள்ளது. 

 

இங்கு விளையும் தக்காளி, பீன்ஸ் கேரட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்யப்படுகிறது. அதேபோல் மலர்கள் உற்பத்தியில் இங்கு விளையும் ரோஜா மலர்கள் உலகத்தரம் வாய்ந்தவை ஆகும் அதேபோல் கார்னேஷன், ஜெர்பரா, உள்ளிட்ட அலங்கார மலர்களும் ரோஜாவை போல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தளி சட்டப்பேரவை தொகுதியில் தேன்கனிக்கோட்டை வட்டம், அஞ்செட்டி வட்டம் ஆகிய இரண்டு வட்டங்களும், அவற்றில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உரிகம், ஜவளகிரி ஆகிய 4 வனச்சரகங்களும் அமைந்துள்ளன. இந்த வனச்சரகங்களில் வாழும் அரிய வகை பட்டியலில் உள்ள வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு “காவேரி வடக்கு வனஉயிரின சரணாலயம்” அமைந்திருப்பது வனம் சார்ந்த தளி தொகுதியின் சிறப்பாகும் 

 

கல்வியறிவு இல்லாத மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் முன்னேற்றம் இல்லாத கிராமங்கள், என தமிழக எல்லையல் காட்டுப்பகுதி சூழ இருப்பதால் கவனிப்பாரற்ற இருக்கிறது இந்தத் தொகுதி   நாம் பார்த்திராத ஆதிகால கிராமங்கள் இன்னும் நிறைய உள்ளன. 

 

அடர்ந்த வனமும், வானூயர்ந்த மலைகளும் சூழ்ந்த இயற்கை வளமிக்க தொகுதியாக தளி உள்ளது. இங்கு ஆண்டுக்கு சராசரியாக 900மி.மீ. மழை பொழிவுடன் தளி பெரிய ஏரி உட்பட நூற்றுக்கணக்கான ஏரிகள் சூழ்ந்துள்ளதாலும், சுமார் 60 கி.மீ நீளத்துக்கு தளி தொகுதியை ஒட்டி காவிரி ஆறு ஓடுவதாலும், இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சியான தட்பவெட்ப நிலை நிலவுகிறது

 

 

இப்பகுதி மக்களின் முக்கிய உணவாக கேழ்வரகு உள்ளதால், ஆண்டுதோறும் மானாவாரியில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் கேழ்வரகு பயிரிடப்படுகிறது. அதேபோல சுமார் 15ஆயிரம் ஹெக்டரில் மலைப்பயிர்களான காலிப்பிளவர், கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகள் பயிரிடப்பட்டு,சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கும் மற்றும் பெங்களூரு, கேரளா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் தினமும் விற்பனைக்கு செல்கிறது. 

 

அதேபோல இங்கு மலர் உற்பத்தியும் சிறப்பாக உள்ளது. குளுமையான தட்பவெட்ப நிலை மற்றும் மண்வளத்தை பயன்படுத்தி சுமார் 1500 விவசாயிகள் பசுமைக்குடில் அமைத்து மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பசுமைக்குடில்களில் சொட்டுநீர் பாசனம் மூலமாக உயர் விளைச்சல் தரக்கூடிய உலக தரம்மிக்க ரோஜா, கார்னேசன், ஜெர்பரா உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும் தளி தொகுதிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இங்கு மத்திய அரசால் 2017-ம் ஆண்டு இந்தியா - இஸ்ரேல் கொய்மலர் மகத்துவ மையம் தொடங்கப்பட்டு, புதிய தொழில் நுட்பத்தில் ரோஜா உள்ளிட்ட மலர்கள் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. 

 

தளி ஏரி மற்றும் பூங்கா ஒசூரில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமம் முழுவதும் மலை கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. கடல் மட்டத்திற்கு மேல் 1000 அடி உயரத்தில் அமையபெற்ற கிராமம் ஆகும்

-ஜான்

 அரியலூர்