பல்லடம் (ஆங்கிலம்:Palladam), தமிழ்நாட்டில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பல்லடம் தேசிய நெடுஞ்சாலை 67-இல் அமைந்துள்ளது. இங்கு முதன்மையான தொழிலாக கோழி வளர்ப்பும் விசைத்தறியும் திகழ்கிறது. பல்லடம் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது
கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 325 மீட்டர் (1066 அடி) உயரத்தில் இருக்கின்றது. 'தென் இந்தியாவின் மான்செஸ்டர்' என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பல்லடம் அருகேயுள்ள கரைப்புதூர் ஊராட்சி,அல்லாளபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான உண்ணாமலையம்மன் உடனமர் உலகேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
பூமலூர் பல்லடத்தம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், பூமலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]
: இச்சிப்பட்டி பல்லடத்தம்மன் மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், இச்சிப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1
பூமலூர் சென்னியாண்டவர் கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், பூமலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்
பல்லடத்தில் முக்கிய தொழில்கள் ஜவுளி, இறைச்சி கோழி வளர்ப்பு, விவசாயம், காற்றாலை. பல்லடத்தைச் சுற்றிலும் விசைத்தறி மற்றும் பின்னல் ஆடை தொழில் மையங்கள் அமைந்துள்ளன இவை அனைத்தும் பெரும் அந்நிய செலாவணி ஈட்டுகின்றன. பல்லடம் உயர் தொழில்நுட்பப் பூங்கா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பலவகையான ஜவுளி கூடங்கள் அமைந்துள்ளன. இது 65 எக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
கல்விதொகு பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது, பல்லடத்தின் அருகில் பார்க் கலை மற்றும் அறிவியல் கல்லுரி, தொழில்முறை கல்வி அறக்கட்டளையின் பொறியியல் கல்லுரி அமைந்துள்ளது. கோயம்புத்தூர் அருகேயுள்ளதால் இங்குள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி பயில வாய்ப்புகள் அதிகமாகவுள்ளன. இதனை தவிர்த்து ஸ்கேட்(SCAD) மற்றும் ப்ரொபஸனல்(Professional) ஆகிய பொறியியல் கல்லூரிகளும் உள்ளன பள்ளிகள்
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
இன்பேன்ட் ஜீசஸ் மேல்நிலைப்பள்ளி.
பாரதி மேல்நிலைப்பள்ளி.
புளூ பேர்டு மேல்நிலைப்பள்ளி.
கண்ணம்மாள் தேசிய மேல்நிலைப்பள்ளி.
விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி வங்கிகள்
ஐசிஐசிஐ வங்கி.
சவுத் இந்தியன் வங்கி.
ஸ்டேட் வங்கி.
ஆக்சிஸ் வங்கி.
ஆந்திரா வங்கி.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கத்தோலிக் சிரியன் வங்கி.
கரூர் வைசியா வங்கி.
பரோடா வங்கி.
கனரா வங்கி.
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி.[6]
பல்லடம் சஞ்சீவ ராவ் (
தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை புல்லாங்குழல் வாத்தியக் கலைஞர்
ஆவார்.