எங்கள் ஊர் பெருமாநல்லூர் திருப்பூருக்கு அருகில் அமைந்துள்ள ஒரு ஜவுளித் தொழில் நகரமாகும் . தேசிய நெடுஞ்சாலை (NH 47) .
இது கொச்சி/கோயம்புத்தூரை ஈரோடு/சேலத்துடனும் திருப்பூரை கோபிசெட்டிபாளையத்துடனும் இணைக்கும் NH-47 இல் உள்ள குறுக்கு சந்திப்பாகும்.
திருப்பூர் மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. அண்மையில் நடந்த ஆய்வில் இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளது. பின்னலாடை தொழிலில் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்நகரையே நம்பி உள்ளன. கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகரம் ஆரம்ப காலத்தில் சிறு கிராமமாக இருந்து, இன்று தேசிய அளவில் பின்னலாடை தொழிலில் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. திருப்பூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
தமிழகத்தின் "டாலர் சிட்டி" என்று அழைக்கப்படும் ஓர் நகரமாக திருப்பூர் உள்ளது.
உலக நாடுகள் தங்களது ஆடை உற்பத்திக்கு முதலில் தேர்வு செய்யும் ஓர் நகரமாக திருப்பூர் விளங்குகிறது.
கொங்கு மண்டலத்தின் மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும்.
சென்னையைப் போலவே வெளிமாநில, வெளிமாவட்ட, வெளிநாட்டினரை சகஜமாக காண முடியும்.
ஆசிய கண்டத்திலேயே அதிக பெண்கள் பயிலும் பள்ளியாக திருப்பூர் ஜெய்பாவாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இங்கு தான் அமைந்துள்ளது.
சுதந்திர போராட்ட வீரர் கொடிகாத்த திருப்பூர் குமரன் உயிர்விட்ட மண் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருப்பூர் மாவட்டத்தில்தான் எங்கள் பெருமாநல்லூர் ஊராட்சி அமைந்துள்ளது
எங்கள் பெருமாநல்லூர் ஊராட்சி, திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கும் திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்
• பொரசப்பாளையம்
• அத்திக்காடு
• காந்திநகர் ஆ.தி.காலனி
• பொடாரம்பாளையம்
• பொடாரம்பாளையம் ஆ.தி.காலனி
• வலசுப்பாளையம்
• பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் ஜவுளித் தொழிலின் மையமாக வளர்ந்துள்ளது. புதிய திருப்பூர் தொழில் பூங்கா (நேதாஜி அப்பேரல் பார்க்), இது ஒரு ஒருங்கிணைந்த தொழில் பூங்கா, பெருமாநல்லூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. பெருமாநல்லூரில் உள்ள சனிக்கிழமை சந்தைக்கு பக்கத்து கிராமங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயம் மற்றும் பிற வீட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்கின்றனர்
திருப்பூரில் இருந்து குன்னத்தூர் , நம்பியூர் , கணக்கம்பாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் (பஸ் எண். 10, 26 ஏ, 54, 26 மற்றும் 43) பெருமாநல்லூர் வழியாகச் செல்கின்றன. இந்த இடம் திருப்பூரில் இருந்து 11 கிமீ தொலைவிலும் , அவிநாசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது .
எங்கள் ஊர் பெருமாநல்லூரில் அனுமந்த ராயசுவாமி என்ற பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்
எங்கள் பெருமாநல்லூரில் கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் ஆலயம் என்ற பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது.
1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பாண்டிய & விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாக கல்வெட்டுகள் செய்தி கூறும் பழமை வாய்ந்த ஆலயம். இன்றளவும் சிதியமடையாமல் கம்பீரமாக காட்சியளிக்கிறது
கோவிலில் உள்ள ஒவ்வொரு தூணிலும் கலைநயம் மிக்க சிற்பங்கள் செதுக்கப்பட்டு இன்றும் பொழிவுடன் உள்ளதே இக்கோயிலின் தனி சிறப்பு
உத்தமலிங்கேஸ்வரர், கோவர்த்தனாம்பிகை தவிர விநாயகர், முருகனுக்கு தனித்தனி ஆலயங்களும் உள்ளது
மேலும் எங்கள் பெருமாநல்லூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கொண்டத்து காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் குண்டம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக கொண்டாடப்படும் .
சண்முகம்