tamilnadu epaper

எங்கள் ஊர் மதுக்கூர் சிறப்புகள்

எங்கள் ஊர் மதுக்கூர் சிறப்புகள்

எங்கள் ஊர் மதுக்கூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே முத்துப்பேட்டை 18 கிமீ; மேற்கே பட்டுக்கோட்டை 12 கிமீ; வடக்கே மல்லிப்பட்டினம் 35 கிமீ; தெற்கே மன்னார்குடி 22 கிமீ ஒரத்தநாடு 25 கிமீ உள்ளது. 

 

இவ்வூரின் அமைவிடம் கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.

 

 

மதி+கூர் (அறிவு+கூர்மை) = மதுக்கூர். 

 

தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சை மாவட்டத்தில் சுற்றமும் நெற்பயிர்களுக்கும், கரும்பு தோட்டங்களுக்கும், தென்னைத் தோப்புகளுக்கும், வாழத் தோப்புக்களுக்கும் மத்தியில் அமைதிக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் அருமையான ஊர் தான் எங்கள் "மதுக்கூர்" 

 

மனித நேயத்தின் மறு உருவம் "மதுக்கூர்" என்றால் அது மிகையாகாது. 

 

ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து மதுக்கூரில் நடைப்பெறும் இஸ்லாமிய நிகழ்ச்சிகள், கோவில் திருவிழக்கள், கிறிஸ்தவ நிகழ்ச்சிகளில் அனைத்து மதத்தினரும் கலந்துக் சிறப்பிப்பதே இதற்கு உதாரணம். 

 

சகோதரத்துவத்தையும், சமத்துவதையும் உள்ளுரில் மட்டும் வளர்க்காமல் உலகளவில் வளர்த்து வருபவர்கள் " மதுக்கூரார்கள்" என்றால் அது மிகையாகாது. 

 

மதுக்கூரில் பிறந்த பிரபலங்கள்

 

 

• அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி 

 

• மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர். 

 

• மதுக்கூர் மஜீத் - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார். 

 

• மதுக்கூர் கண்ணன் - அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. யார் திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள். 

 

• மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்

 

 

மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் முப்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மதுக்கூரில் இயங்குகிறது.

 

 

 

ஆங்கிலேயரின் ஆட்சியின் போது ஜமின்களின் கட்டுபாட்டில் இருந்த பகுதியில் "மதுக்கூரும்" ஒன்று. வாட்டாக்குடி ஜமின் அவர்களின் கட்டுபாட்டில் இப்பகுதிகள் இருந்தன. இப்பொழுதுள்ள மதுக்கூர் வடக்கு(பழைய மதுக்கூர்) தான் முன்பு "மதுக்கூர்" என்றழைக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

 

இப்பொழுது "மதுக்கூர்" என்றழைக்கப்படும் இப்பகுதி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மரம், செடி, கொடிகளாக மண்டி காடுகளாக காட்சியளித்தன. ஜமின் தார் தஞ்சாவூர் அரண்மனைக்கு செல்லும் பாதையாகவே இது அமைந்திருந்தது. சாரட் வண்டியின் தடங்கள் மட்டுமே இப்பகுதியில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. காலத்தின் வளர்ச்சியால் முதன்முதலாக மதுக்கூரில் ஓர் குடும்பம் ஜமின் தாரின் அனுமதியுடன் (இப்பொழுது உள்ள கீற்று சந்தையில்)குடியேறியது. பின்னர் காலபோக்கில் மக்கள் தொடர்ந்து குடியேறவே "மதுக்கூர்" மாநகர் உருவாகியது என்றும் கூறப்படுகிறது. அதன் பின் 1947 இல் நாடு விடுதலை பெற்று விட  உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன 

 

மதுக்கூரில் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இங்குள்ள இறைவன் அமிர்தகடேசுவரர் ஆவார். இறைவி மங்களாம்பிகை.பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த அமிர்தம் சிவலிங்கமாக மாறியதால் மூலவர் அவ்வாறு அழைக்கப்படுகிறார். தேவர்களும், அசுரர்களும் கடலைக் கடைந்து கலசம் வெளிப்பட்டதும், இறைவி அதனைப் பங்கிடும் முறையைக் குறித்துத் தீர்மானிக்கும் முன்பாக நீராடச் சென்றுவிட்டதாகவும், அப்போது தரையில் வைத்த கலசமே லிங்கத் திருமேனியாக மாறியதாகக் கூறுவர். 

 

மகாமண்டபத்தில் தேவர்களும், அசுரர்களும் மந்தர மலையை, வாசுகியைக் கொண்டு கடைவதும், அமிர்தகடேசுவரர் எழுந்தருளுவதும் போன்ற சுதை வடிவிலான சிற்பங்கள்

காணப்படுகின்றன. அவை தலபுராணத்தை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளன.

 

ஜான்சன் 

சாத்தூர்