பனை மரங்கள் நடுவிலே
பாய்ந்தோடுது வேம்பாறு..!
ஆறும் கடலும் சேருது
அலைகள் வந்து பேசுது..!!
கடல் நடுவே பாலம்தான்
கையை வீசி நடக்கலாம்..!
கலங்கரை விளக்கத்தில் ஏறியே
தொடு வானத்தை ரசிக்கலாம்..!!
ஆர்ப்பரிக்காதக் கடலிலே
ஆசை தீரக் குளிக்கலாம்..!
வகை வகையான மீன்களை
சமைத்து நீங்களும் உண்ணலாம்..!!
தேவாலயங்கள் பல உண்டு திருக்கோயில்கள் அதிகமுண்டு
வரலாற்றில் இடம் பெற்ற
எங்க ஊரு வேம்பாரு..!!
-மு.க.இப்ராஹிம் வேம்பார்