tamilnadu epaper

ஒழியாதோ ஒரு வாதம்.?

ஒழியாதோ ஒரு வாதம்.?


ஈரேழு பிறவிக்கு உடன்வருவேன் என்றானே..

ஒரு ஏழு நாட்களுக்குள் உயிர்துறந்து போனானே..


சுற்றுலா கூட்டிவந்து..

சுட்டு உலா முடித்தானே..

வெற்றுடல் நான்தழுவ

விட்டுவிட்டு போனானே!


காஷ்மீரு ரோஜாவே..

இரத்தம் வடிந்ததென்ன?

தேசத்தை பாராது..

தெருவெங்கும் ஓலமென்ன?


மனிதம் அங்கில்லையோ..

மதியுடையோர் யாருமிலையோ... புனிதநதி கங்கையிலே

போர்விடத்தை கலந்தாரோ. 


புத்தன் வந்த பாதையிலே.. 

இரத்தம் வர காணுவதோ.. துப்பாக்கி முனையினிலே

தூங்கித்தான் போனதுவோ.?


அன்பு இரக்கமெல்லாம் அடங்கிவிட செய்தனரே

துன்பச் சிறையினிலே ..

இணைப்பறவை சிக்கியதோ..


இரும்புக் கரம் கொண்டு அடக்குவோர் வருவாரோ.. தீவிரத்தின் முனை ஓடுங்க.. திருநாடு காப்பாரோ...


-வேகல்யாண்குமார்.