ஊரெல்லாம் கொண்டாட்டம்
இவன் மட்டும் யாருமன்றி
திண்ணையில் அமர்ந்திருக்கிறான்..
பட்டாடை உடுத்தி வலம்வரும் அம்மன் ஊர்வலம் கேட்டுக் கொண்டே வெளிர் ஆடையி்ல் உலாவருகிறது
நிலவு போர்த்திய அம்மனொருத்தி
இன்றுதான் இறந்த மகனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருப்பார் அப்பா கலட்டிய தாலியில் கணவனின் கைரேகை தேடுகிறாள் மனைவி இல்லாத அப்பாவின் சைக்கிளில் கைப்பிடியை பிடித்து கலங்குகிறான் மகன் வேட்டு சத்தத்தில் கலங்கிய உள்ளத்திற்கு ஊருக்கு வெளியே ஒரு தனிமைக்குடில் அதில் யாரும் பார்த்திடாமல் தாண்டவமாடுகிறார் தாழிடாமல் வெளியே நடமாடும்
கதவுக்கு பின்னால் ஒரு கடவுள்..
-சே .கார்கவி கார்த்திக்