கல்லூரி நாட்களை அசைப்போட தோனுதடி
அசைப்போட்ட நேரத்தில் விழி நீர் வத்திப் போகுதடி...
நினைவுகளும் கனவுகளும் சுமந்த படி கல்லூரியில் இறுதியாய் பிரிந்தோமடி
கனவில் கூட பார்க்க முடியாமல் பறந்தோமடி ...
தொலைந்த நினைவுகள்
துரத்துதடி
துன்பத்தை என்னூள் விதைக்குதடி...
கடந்து போன நாட்கள் எல்லாம் கண் முன்னே தெரியுதடி கற்பூரமாய் உன் நினைவு என்னூள் எரியுதடி ...
விடியாத இரவில் ஏதோ நினைவுகள் என்னை விழிக்க வைக்குதடி
விடிந்த பின்னும் ஏனோ கண் உறங்க மறுக்குதடி ...
பழைய நினைவுகள் என்னை ஆட்டி வைக்குதடி கபால ஒட்டுக்குள்ளே பாம்பு இரண்டு புரண்டு நெலியுதடி...
ஓவ்வொரு மனித மனசுக்குள்ளே
அழகான அற்புதமான அழியாத நினைவுகள்
அழியும்வரை ஆட்டி வைக்குதடி ...
வாழ்கின்ற நாட்களில் சுமக்கின்ற வலிகளோடு கல்லூரி நினைவுகளை
இனிக்கின்ற வலியாய் எண்ணி நினைக்கின்றேன் தினம் தினம்...
- கவிஞர் சு. தேவேந்திரன்
சிதம்பரம்