கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு 23/04/2025 அன்று புதன்கிழமை மாலை 5.00 மணி அளவில் பல்வகை பயன்பாட்டு அரங்கில் *"புத்தகம் - வாசிப்பு - நூலகம்"* என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் முனைவர்.தினேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். துணை முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திரு. சந்தான கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பல்வேறு ஆளுமைகள் வாசகர்களுடன் வாசிக்கும் பழக்கம் என்பது எவ்வாறு மேம்பட வேண்டும் எனவும் புத்தகமும் நூலகமும் எவ்வாறு சமூக தொடர்பை வலுப்படுத்தும் என்பதைப் பற்றியும் கலந்துரையாடினர். உதவி நூலகர் மற்றும் தகவல் அலுவலர் திருமிகு.கி.சிவகாமசுந்தரி அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வாசகர்கள் அனைவருக்கும் நன்றி.