tamilnadu epaper

புத்தக வாசிப்பு தினம் கொண்டாட்டம்

புத்தக வாசிப்பு தினம் கொண்டாட்டம்

எட்டையபுரம்

எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் உலக புத்தக தின வாசிப்பு விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது.விடுமுறை என்பது வீணாகப் பொழுதைக் கழிப்பதற்கான நாட்கள் அல்ல..பயனுள்ள முறையில் குறிப்பாக வாசிக்கும் பழக்கத்திற்கு இந்நாட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனப் பள்ளி தலைமையாசிரியரும் எழுத்தாளருமாகிய மு.க இப்ராஹிம் மாணவச் செல்வங்களுக்கு எடுத்துரைத்தார்.மேலும் அவர் எழுதிய மயிலக்கா என்ற குழந்தைப்பாடல் மற்றும் சிரிப்பு சிறப்பு நூலினைப் பரிசாக வழங்கினார்.இடைநிலை ஆசிரியர் இந்திரா நன்றி கூறினார்.