tamilnadu epaper

காகத்திற்கு ஏன் உணவு அளிக்க வேண்டும்

காகத்திற்கு ஏன் உணவு அளிக்க வேண்டும்


 *காகத்திற்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதமும்* , *சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கிறது* ...... *


 பித்ருக்கள் தான் காகத்தின் வடிவில் பூலோகத்தில் வலம் வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. 


காகங்களுக்கு முக்காலங்களையும் அறியும் சக்தி இருக்கின்ற காரணத்தால் தான், அது, ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது, கெட்டதை முன்கூட்டியே தெரிவிக்கும் விதமாக பல்வேறு சமிக்ஞைகள் மூலமாக உணர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.


அதையடுத்து, காகங்களின் சிறப்பு மற்றும் அதன் அறிவிப்பு குறித்தும், காகத்தை வணங்குவதால் யார், யாருடைய அருள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.


காகத்திற்கு மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு தனிக்குணம் உள்ளது.

மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும். ஆனால், மற்ற பறவைகள் தீட்டுகளை பார்க்காது.


ஏதாவது ஒரு காகம் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று "கா கா" என்று குரலெழுப்பி இறந்த காகத்திற்காக துக்கம் அனுஷ்டிக்கும்.


அதன்பின்பு அந்த காகங்கள் எல்லாம் நீர்நிலைக்கு சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து, மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் வழக்கம் காக்கைக்கு உண்டு.


இவ்வாறு பல சிறப்புகளைக் கொண்ட காகத்திற்கு தினம்தோறும் உலர் திராட்சையை உணவாக வைப்பது சிறந்தது.


அதனால் கிடைக்கும் புண்ணியம் ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரும்.

மேலும், உங்கள் வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான துன்பங்களும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.


நம் வாழ்வின் இறுதிக்காலம் வரை மிக சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும் என்று காக சாஸ்திரம் கூறுகிறது.


சில வீடுகளில் காகம் தொடர்ந்து கரைந்து கொண்டே இருந்தால் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது.


காகத்திற்கு தினந்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதமும், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கிறது.


காகத்திற்கு உணவு வைக்கும் போது, எமதர்மனின் ஆசீர்வாதம் மற்றும் விநாயக பெருமானின் ஆசீர்வாதத்தையும் பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி