tamilnadu epaper

குழந்தைகள் தினம் (14.11.24)(நேரு மாமா பிறந்த தினம் )

குழந்தைகள் தினம் (14.11.24)(நேரு மாமா பிறந்த தினம் )

 

குழந்தைகள் தினம் நேரு மாமாவின் பிறந்த தினமாக மலர்ந்து வாசம் வீசுது 

குழந்தைகள் சந்தோஷத்தின் பிறப்பிடம் !

மழலை மொழி கேட்டாலே மனதுக்குள் பரவசம் மிகுதே .

 

ஆசியுடன் அவர் செய்யும் புன்னகையில் புது வெளிச்சம்,

மழலை மனங்களில் சோலை மலர்கின்றது.

கள்ளம் கபடம் அறியாத பிஞ்சு நெஞ்சத்தை நேரு விரும்பியதில் வியப்பில்லையே. 

 

நாம் உச்சி முகரும் போது அதில்

பாசம், நம்பிக்கைகள் தரும் குணங்கள்.

குழந்தைகள் வாழ நாடும் இல்லமும் வாழுமே 

 

பூமியில் குழந்தைகள் கிடைத்த பொன்னான பொக்கிஷங்கள்,

நம் குழந்தைகள் - நம் அன்பு சுடர்கள்!

 

நேரு மாமா விரும்பும் குழந்தைகளை ஞாலமே விரும்பும்.

 

உஷா முத்துராமன்