*(1)*
"தலைவர் பரப்புரை செய்துகிட்டிருக்கும்போது மேடையில் ஒரு பாம்பு புகுந்துடுச்சாமே.....? அப்புறம்....?"
"அப்புறம் என்ன, பரபரப்புரை ஆயிடுச்சு......."
*(2)*
*ஒருவர்:*
"வீடே இல்லாமல் பிளாட்பாரத்தில்தான் தங்கியிருக்கேன்னு சொல்றே, அப்புறம் உனக்கு எப்படி ஓட்டர் ஐடி, ஆதார் கார்டு, பான் கார்டு எல்லாம் கிடைச்சது ?"
*பிச்சைக்காரன்:*
"என்னோட இயர்லி டர்ன் ஓவரைப் பார்த்து பாங்க் மேனேஜர்தான் எல்லாவற்றையும் வாங்க ரெகமெண்டு செய்தார்"
*(3)*
"ரெய்டு செய்ய வந்திருக்கிற குழுவுக்கு இதுதான் முதல் ரெய்டாம்"
"அதுக்காக அதிகாரிகள் விசிலடிச்சு, ரிப்பன் வெட்டி திறப்புவிழா செஞ்சு, லட்டு கொடுத்து, பட்டாசு வெடிக்கறது கொஞ்சம் ஓவர்தான்...........!"
*(4)*
"அந்த நடிகர் தன்னோட கட்சியின் பெயரைச் சொன்னவுடன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்த ரசிகர்கள் திடீர்னு ஏன் சோகமாயிட்டாங்க..............?"
"அது கட்சியோட பெயரில்லையாம், அவரு நடிக்கப்போகிற அடுத்த படத்தோட டைட்டிலாம்........"
*(5)*
*மகன்:* அப்பா ஸ்கூல்லே என்னைப்போலவே ஒரு பையன் என் வகுப்பில் படிக்கிறான். அவனோட அப்பாவும் எழுத்தாளராம் !
*எழுத்தாளர் தந்தை(ஆச்சரியமாய்):* அப்படியா.......... ஒரு வேளை ஒத்த சிந்தனையா இருக்கும்டா…!!
*(6)*
"எங்க வீடு ரொம்பவும் பெரிசு மொத்தமா சுத்திப் பார்க்கணும்னா ஒரு நாள் வேணும்........."
"எங்க வீடு அதவிட பெரிசு. கிச்சன், டைனிங் ஹால், பாத்ரூம் போகணும்னா கூட ஜிபிஎஸ் துணையோடுதான் போக வேண்டியிருக்கும்.......!!"
*(7)*
*நிருபர்:* “அடுத்த வருஷம் உங்க ஆக் ஷன் ப்ளான் என்ன….?”
*நடிகை:* “அடுத்த வருடம் ஜனவரியில் திருமணம், மார்ச்சில் விவாகரத்து. அப்புறம் எனது முதல் பட டைரக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு. அது காம்ப்ரமைஸ் ஆனதும் இரண்டாவது படத்தின் ஹீரோ மீதும், மூன்றாவது படத்தின் துணை நடிகர் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகள். இதுக்கு எல்லாம் எண்ட் கார்டு போட்டதும் ஆறுமாத வாரண்டியுடன் இரண்டாவது திருமணம் செய்வேன்……!!”
*(8)*
"மன்னர் தோற்றுவிடுவோம் என்று தெரிந்தும் ஏன் திரும்பத் திரும்ப போருக்குப்போய் தோற்று ஓடி வருகிறார்.....?"
"ஆயிரம் தோல்வியைத் தழுவிய அபூர்வ சிந்தாமணின்னு பேரெடுக்கத்தான்........!!"
*(9)*
*நோயளி:* "என் கனவுல ரொம்ப பழைய நடிகைகள் மட்டும்தான் வராங்க, புதுப்புது நடிகைகள் வர்ற மாதிரி என் மூளையை அப்டேட் செய்ய ஏதாவது வழி இருக்கா டாக்டர்......!?"
*டாக்டர்:* ?..................?..............!
*(10)*
"இது டீவி மெகா சீரியல் டைரக்டர் டைரக்ட் செய்த படம்னு எப்படி கண்டுபிடிச்சே……?"
"படம் பார்க்க போகிற பெண்கள் எல்லோருக்கும் ஒரு மெகா சைஸ் கைக்குட்டையை ஃப்ரீயா கொடுக்கறாங்களே.........…!!"
*ஆர். ஹரிகோபி, புது டெல்லி*