tamilnadu epaper

டிப்ஸ்

டிப்ஸ்


 ஒரு விடுமுறை தினத்தில்

 குடும்பத்துடன் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, பில் பே 

செய்து விட்டு, மிச்சமிருந்த இருபது ரூபாயை எச்சிலையை எடுத்து டேபிள் கிளீன் செய்யும் அந்த ஆயாவிற்கு கொடுத்தார் சுந்தர்.

     இது கண்ட மனைவி மகள்களுக்கு பெருத்த ஆச்சரியம்.

     அப்பாவிடம் திவ்யா கேட்டாள், "என்னப்பா 

எப்ப ஓட்டலில் சாப்பிட்டாலும் சர்வர்க்கு டிப்ஸ் தர மாட்டீங்க. கேட்டால், அதை நான் விரும்புவதில்லை என்பீர்கள். இப்ப மட்டும் எப்படி கொடுத்தீர்கள்?

     "அம்மா சர்வர்களுக்கு சர்வ் பண்ணுவது தான் வேலை. அதற்கான ஊதியத்தை தான் ஹோட்டல் நிர்வாகத்திடம் வாங்கிக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு டிப்ஸ் தர என் மனம் விரும்புவது இல்லை. ஆனால் இப்ப வந்த பெண்மணி அப்படி இல்ல, ஒருவர் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பது எவ்வளவு கஷ்டமானது? வீட்டில் நம்ம அம்மா செய்கிறார்கள் என்றால் நம் பிள்ளை என்கிற உணர்வு. ஆனால் இவர்கள் அப்படி இல்லையே!

ஹோட்டலுக்கு வரும் அனைவருமே சர்வருக்கு பணம் தந்தே பழக்கப்பட்டு விட்டார்கள். ஆனால் இது போல் எச்சில் இலை எடுப்பவர்களை யாரும் கண்டு கொள்வதில்லை.

அதனால் அவர்களுக்கு நான் பணம் தந்தேன் இதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி"

   சொல்லிய அப்பாவை பெருமையுடன் பார்த்த திவ்யா, "நீங்க கிரேட் பா" என்றாள்.


-இரா ரமேஷ் பாபு 

 தவளைகுப்பம் -605007