tamilnadu epaper

தமிழோடு விளையாடு

தமிழோடு விளையாடு

ஆசிரியர் பெயர் :தமிழரிஞர்

செ. புதூர் இல. ரவி

முகவரி :தமிழகம் பதிப்பகம்

செ. புதூர்,

1/84தெற்குத் தெரு,

திரு விடைமருதூர் வட்டம்

தஞ்சாவூர்

செல் 9952113194

மெயில் :

ravispr1962@gmail. com

பக்கம் 96

விலை ரூபாய் 120


 தமிழை பிழையின்றி எழுதவும் பேசவும் ஓர் அருமையான நூல் தமிழோடு விளையாடு என்ற நூலாகும்.

   முதலில் அம்மா, அப்பா என்ற வார்த்தைக்கு இவர் சொல்லும் விளக்கம் அருமை.

  அ உயிர் எழுத்து

  ப் மெய் எழுத்து

  பா உயிர் மெய் எழுத்து


     அதேபோல

அ உயிர் எழுத்து

ம் மெய் எழுத்து

மா உயிர் மெய் எழுத்து.

      அழகாக சூட்ட அருமையான தமிழ்ப் பெயர்கள் என அழகிய தமிழ்ப் பெயர்களை வரிசை படுத்தியுள்ளார்.

        தமிழில் திட்டினாலும் அழகே என கம்பர் பாடலை உதாரணமாக்கியுள்ளார். எட்டே கால் லட்சணமே என்ற பாடல் அருமை.

    அதேபோல மங்கலம் --மங்களம்

இரங்கல் -இறங்கல் இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் வெவ்வேராக உள்ளதை தெளிவு படுத்தி உள்ளார்.

      கம்பன் வீட்டு கட்டுத்தரியும் கவிப்பாடும் என

" வட்டமாக இருக்கும்

வண்ணிக் கோடியில் தாவும்

கொட்டுபவர் கையில் கூத்தாடும் " என கம்பன் வீட்டு பணிப் பெண் பாடுவதாக ஒரு அழகிய பாடலை கவிஞர் தந்துள்ளார்.


   தமிழும் தஞ்சாவூர் பெரியக்கோயிலும் என்ற தலைப்பில் ' தஞ்சை பெரியக்கோயிலின் உயரம் 216 அடி. அதேப்போல தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் 216.


     சிவலிங்கம் 12 அடி உயரம். உயிரெழுத்துக்கள் 12.

     சிவலிங்கத்தின் பீடம் 18 அடி உயரம்.

   மெய் எழுத்துக்கள் 18.

     சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி.

    தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. "என நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.

    இப்படி பார்த்து பார்த்து 1000 வருடங்களுக்கு முன்பே கோயில் கட்டிய அரசன்

இப்போது ஒரு நடிகைக்கு ஒரு ரசிகன் கோயில் கட்டியுள்ளான். அவன் எந்த அளவை எடுத்து கட்டினான் என்பது நமக்கு வேதனை.

  மொத்தம் 70 தலைப்புகளில் தமிழ் அறிஞர் எழுதி உள்ளார். அனைத்தும் நாம் படிக்க வேண்டிய தலைப்புகளே. அனைவரும் வாங்கி படித்து பயன் பெற வேண்டும் என தமிழ் கூறும் நல் உலகை கேட்டுக்கொள்கிறேன்.