எப்படி ஆனாலும், நடக்காத ஒன்றை, ஆண்டாள்" />

tamilnadu epaper

திருப்பாவை

திருப்பாவை

திருப்பாவை விளக்கம் எழுதிக் கொண்டிருக்கும்போது,

அதில் போரில் கண்ணன் ஆயுதம் எடுத்ததாகப் பாடுகிறாள்


"இது எப்பொழுது நடந்தது?" என்று எனக்குள் ஒரு குடைச்சல்.


எப்படி ஆனாலும், நடக்காத ஒன்றை, ஆண்டாள் எழுதி இருக்க மாட்டாள்.


தேடல் தொடர்ந்தது.


அப்போதுதான் "கண்டு கொண்டேன்! கண்டு கொண்டேன்!" என்றது மனது.


மகாபாரத யுத்த களத்தில் சாரதியாக கண்ணன், அருச்சுனன் வில்லோடு,


எதிரில் பீஷ்மர் அம்பு தொடுக்கிறார்.


ஒன்றுகூட அருச்சுனனைத் தாக்கவில்லை.


அத்தனையும் தேரோட்டி ஆகிய கண்ணனைச் சுற்றியே,


கண்ணனோ "தவறாக யுத்தம் செய்கிறார் பீஷ்மர்!" என்கிறார்.


ஆனாலும், தன்அம்பை செலுத்துவதில் எந்த மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து விடுகிறார் பீஷ்மர் அம்புகளை.


ஒரு கட்டத்தில் கண்ணன் பொறுமை இழந்து தன் குரலை உயர்த்தி "பீஷ்மரே! இவ்வாறுதான் நீங்கள் யுத்தம் செய்வீர்களானால், நான் ஆயுதத்தைதான் எடுக்க வேண்டிவரும்! உங்களைக் கொல்ல நேரிடும்!" என்றார்.


அவனது முகத்திலும், உடலிலும், பக்கவாட்டாகச் செல்லும்போது கூடச் சும்மா இருந்தான் ஆனால், அனுமன் கொடியில் அனுமன் மீதும் பட்டபோது, "ஆயுதத்தை எடுத்து,உம்மைக் கொல்லப் போகிறேன்!" என்றார்.


பீஷ்மர் தம் வில்லைக் கீழே போட்டுவிட்டு "உன்னால் எனக்கு இறப்பு நேரிடும் என்றால் நான் மகிழ்ச்சியாக இறப்பேன்!" என்றார்.


"அது மோட்ஷமல்லவா!"


சுதாரித்துக் கொண்ட கண்ணன் "உமது மரணம் இவ்வாறு நடக்காது!" என்று சமாதானமடைந்தார்.


அவருக்கு நினைவுகள் நிழலாடின.


யுத்தம் நடைபெறுவதற்கு முன்பே கண்ணன் "நான் இப்போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன்!" என்றார்


இதைக் கேட்ட‌ பீஷ்மர் "உன்னை‌ நான் ஆயுதம் ஏந்த விட்டால்.. என நிறுத்தி,

அப்படியானால் "நான் சரணாகதி அடைந்து மோட்சத்தை அடைவேன்!" என்றார்


இந்த நினைவு வந்தவுடன் பீஷ்மரும் கண்ணனும் பரஸ்பரமாக சிரித்துக் கொண்டனர்


இந்த விஷயத்தை ஆண்டாள் திருப்பாவையில் கையாண்டவிதம் ஆஹா ...


-K BANJMATHI. NACHIAR

SIVAGIRI