வணக்கம் சார்!"

"வணக்கம்",என்றேன்.

"வாங்க உட்காருங்க!" என்றார் வாசு.

"உங்களுக்கு வயது என்ன இருக்கும்?" என்றார் வியப்பாக.


"அறுபது ஆகப்போகுது!" என்றேன்.


"இப்படியேதான் சார் உங்களைப் பார்க்கிறேன்!"

"அதே சுறுசுறுப்பு!" எப்படி சார் சான்ஸே இல்லை" />

tamilnadu epaper

தேனீ

தேனீ


"வணக்கம் சார்!"

"வணக்கம்",என்றேன்.

"வாங்க உட்காருங்க!" என்றார் வாசு.

"உங்களுக்கு வயது என்ன இருக்கும்?" என்றார் வியப்பாக.


"அறுபது ஆகப்போகுது!" என்றேன்.


"இப்படியேதான் சார் உங்களைப் பார்க்கிறேன்!"

"அதே சுறுசுறுப்பு!" எப்படி சார் சான்ஸே இல்லை என்றார்.


"ஆமாம்" என்றேன்.


"சிலபேர் கூட சொல்வாங்க என்னை வொர்க்காலிக் என்று!"


"உண்மையிலேயே வேலை இல்லை எனில் எனக்கு என்னவோ போல் ஆயிடும்!"


"ஆமாம் சார்! ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரம் வேலை செய்வீங்களா?"


"ஆமாம்!" என்றேன்


"டிராவல் பண்ணினா கூட காலையில் அதே சுறுசுறுப்பு!" என்றவர் அங்கே கைத்தாங்கலாகக் கூட்டி வந்த பெரியவரை அறிமுகப் படுத்தினார் வாசு.


"எங்கப்பா சார்!"

அப்பாவைக் காட்டி,


"நமஸ்காரம் சார்!", என்றேன்.


"உங்களுக்கு வயது என்ன?என்றேன் அவரிடம். 


"எழுபது ஆச்சு!"


"சுகர் வந்துடுச்சு!"


"இப்போ கால் வீக்கம்!" கால்களைக் காண்பித்தார். வாசு உடனே" நீரழிவு தான் சார் சுகர் வந்தால் ரொம்ப கஷ்டப்பட்டோம் நாங்களும், அவரும் கஷ்டப்படறார்".


"நல்லா இருங்க சார்!" என்றேன்.


"சார்! இவ்வளவு வேலை பார்க்கிறீங்களே! எவ்வளவு சேர்த்து வைச்சிருக்கீங்க?"


அந்தப் பெரியவர் கேட்ட கேள்வி என்னை அவரை நிமிர்ந்து பார்க்க வைத்தது.


"அவருக்கு சேமிப்பு ஒன்றும் இல்லை", என்றார் வாசு.


"ஏன்? உங்க வயதான காலத்தில் என்ன பண்ணுவீங்க..தப்பு பண்ணிட்டீங்களோன்னு தோணுது", என்றார்.


"அனாயச மரணம்தான்!"


"நம்பிக்கைதான்!"


பெண்ணுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தாச்சு.


 "இனி என்ன?" எனக்கும் மனைவிக்கும் போதும் நான் சம்பாதிக்கிறது", என்றேன் அவரிடம்.


"ஓ!"நீங்கள் தேனீ மாதிரியா! ஆனால் உங்களால் உயர்ந்தவர்கள் உங்களுக்கு உதவமாட்டார்களே!"


"தெரியும்! தேனீக்கள் தனக்காக ஒருபோதும் சேமிப்பதில்லை.


இப்படியே விவாதம் போய்க்கொண்டிருந்தாலும் அருகில் அமர்ந்திருந்த என் மனைவி முகம் பயத்தில் வெளறியதை முதல் முதலாகக் கண்டேன்..


"தப்பு பண்ணிட்டோமோ‌!"

என்று பட்டது மனதுக்கு.


"எனக்கு அனாயச மரணம் சரிதான்!" இவள் இருந்தால் என்ன பண்ணப்போறாள்?" "என்கூடவே வாழ்ந்தவள் பெண்கூட ஒத்துப்போவாளா!"..


முதல் முறையாக மனைவியைப் பற்றிய கவலை தோன்ற நகர்ந்தேன்.



-K.BANUMATHI NACHIAR

SIVAGIRI