' அண்ணாச்சி மெஸ் ' ல் 'டெலிவரி மேன்' ஆக வேலை பார்க்கிறான் குமார். மனைவி லட்சுமி, 'ஹவுஸ் ஒய்ப்' .
" என்ன குமாரு, லட்சுமி எப்படி இருக்கா
மூணு மாசம் முழகாம இருக்கான்னு சொன்ன... உடம்ப பாத்துக்க சொல்லு..."
ரம்யா மேடம் விசாரித்தாள்.
ரம்யா மேடம், எல் ஐ சி ல் வேலை பார்க்கிறாள்.குமார் மதிய சாப்பாடு டெலிவரி செய்யும்போது பழக்கம் ஆனாள்.
குமார் மீது அதிக பிரியம்.
குமாரும் லட்சுமியும் காதலித்தது, அதற்கு இரண்டு வீட்டிலும் தடையாக இருந்ததால் ஊரைவிட்டு ஓடிவந்து பதிவுத்
திருமணம் செய்துகொண்டு இங்கு வாழ்க்கை நடத்துவது, இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதாலும் வசதியிலும்
இருவருக்கும் ஏற்றத்தாழ்வு இருந்ததாலோ என்னவோ இரண்டு வீட்டு பெற்றோரும் சரி உறவுகளும் சரி இவர்களிடம் நெருங்காமல் விலகியே இருப்பதும் போன்ற எல்லா விவரமும் ரம்யா மேடம் கேள்விப்பட்டு
குமார் மீது இரக்கப்பட்டாள்.
குமாரும் சாப்பாடு டெலிவரி செய்யும் போது யார் என்ன வேலை சொன்னாலும் முகம் சுளிக்காமல் செய்து வந்தான். எல்லோர்க்கும் அவன் மீது அனுதாபம் ஏற்பட்டது. குறிப்பாக ரம்யா மேடம் குமாரையும் அவனது மனைவி லட்சுமியையும் அடிக்கடி அழைத்து வீட்டில் விருந்து வைத்ததுண்டு.
மாதங்கள் ஓடின. லட்சுமிக்கு ஏழாவது மாதம். ' பாவம் காதலித்த குற்றத்திற்காக
வளையல் காப்பு என்ற வைபவமே நடக்காமல் போய்விடுமோ' என்ற அனுதாபம் ரம்யா மேடம் மனதில் ஏற்பட்டது
'தானே தாயாக இருந்து தன் செலவில் இந்த வைபவத்தை நடத்தி வைப்போம்' என்று முடிவு செய்து அவளுக்கு நெருங்கியவர்களிடம் கலந்தாள்.
" உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் " என்று எல்லோரும் ரம்யாவை
வாழ்த்தினர்.
சென்னையில் இருக்கும் தன் மகனிடம்
இருந்து ரம்யா மேடத்திற்கு போன் வந்தது
"அம்மா... சுபி 'கன்சிவ்' ஆயிட்டா... டாக்டர்
இப்பதான் 'ரிசல்ட்' சொன்னாரு..."
மருமகள் 'கன்சிவ்' ஆன செய்தி கேட்டவுடன், ரம்யா மேடம் பூரித்துப் போனாள். 'கல்யாணம் ஆகி அஞ்சி
வருஷம் கழிச்சி இப்பதான் ஆண்டவன் கண்ண திறந்திருக்கான்...' ஆண்டவனுக்கு கைகூப்பி நன்றி சொன்னாள்.
-சுகபாலா,
திருச்சி.