"நான் வேலைய" />
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் செல்வம் இன்று ஏதோ குழப்பத்தில் இருப்பது போல் தோன்றியதால் ஆதவன் அவன் தோளை பற்றி "என்ன? "என கேட்டான் ஆதவனை பார்த்த செல்வம் "நான் வேலைய ரிசைன் பண்ண போறேன் "என்றான் " ஏன் என்ன ஆச்சு" என்ற போது செல்வம் சொன்ன காரணம் ஆச்சரியமாக இருந்தது கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை சென்று பராமரிக்க போவதாகவும் இனி விவசாயம்தான் தனது தொழில் வாழ்வாதாரம் தனக்கும் அதில் ஆர்வம் இருப்பதாகவும் தன் தந்தையின் ஆசையும் அதுதான் எனவும் சொன்னான் செல்வம். ஆதவன் அவனுக்கு எவ்வளவோ அறிவுரைகள்எடுத்து வைத்தான் ஓரிரு ஆண்டு காத்திருந்தால் பிளாட் போடலாம் மிகப்பெரிய தொகை வரும் விவசாயம் செய்து என்ன வரப்போகிறது என ஆனால் செல்வம் கேட்கவில்லை. அடுத்த நாள் கிராமத்திற்கு செல்ல போவதாகவும் சொல்லி கிளம்பிவிட்டான். யோசனையோடு வீட்டிற்கு வந்த ஆதவன் வீட்டு வாசலில் புது செருப்பை பார்த்ததும் அது சிதம்பரத்தின் செருப்பு என்பதை உணர்ந்து உள்ளே நுழைந்தான் .சிதம்பரம் எழுந்து நின்றார் ஆதவனின் மனைவி " வாங்க "என சொல்லி காபி கொடுத்தாள். " என்ன "என்பது போல ஆதவன் காபியை வாங்கிக் கொண்டு சிதம்பரத்தை பார்த்தபோது சிதம்பரம் சொல்ல தொடங்கினார் "தம்பி நான் உங்க அப்பா காலத்திலிருந்து உங்க கிராமத்து நிலத்துல விவசாயம் பார்க்கிறேன் ஆனா அப்பா போனதுக்கப்புறம் இங்க டவுன்ல ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்கிற உங்களோட பிளாட்டில் சில கீரை வெண்டை கத்திரி மல்லி தக்காளின்னு சில பயிர்களை பார்த்துக்கிட்டு பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கேன் என்னை நல்லாவே பாத்துக்குறிங்க நான் ஒத்த ஆளு ஒண்டிக்கட்ட விவசாயம் தான் உலகம் னு வாழ்ந்துட்டேன்ஆனா இப்ப அந்த இடத்துலயும் எதோ கட்டடம் கட்டப் போறதா நேத்து ஆட்கள் எல்லாம் வந்தாங்க தம்பி அதான் சொல்லிட்டு போலாம்னு வந்தேன் "என்றார் சிதம்பரம். " அதை வித்தோம்னா நமக்கு ஒரு பெரிய அமௌன்ட் வரும் சிதம்பரம் அதுக்கு தான் நாமலே ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் கட்டிட்டா அது பாட்டுக்கு ஒரு வருமானம் மாசம் மாசம் வரும் அதுக்கும் நீங்க தான் இன்சார்ஜ் வாடகை வசூல் பண்ணி கொடுங்க இப்ப இருக்குற மாதிரியே ஹாப்பியா இருங்க வேற என்ன வேணும்னாலும் கேளுங்க உங்க சொந்த வீடு மாதிரி தான்.. அது மட்டும் இல்லாம இதுவரைக்கும் அதுல இருந்து நமக்கு என்ன பெருசா ஒன்னும் வருமானம் இல்லையே ஏதோ வீட்டுக்கு நாலு கத்தரிக்காய் தக்காளி வருது அது சந்தையிலே வாங்கிக்கலாமே " செல்வம் சொன்ன போது சிதம்பரத்தின் முகத்தில் மகிழ்ச்சி வரவில்லை "தம்பி எதுவா இருந்தாலும் மண்ணுல கைய வைக்காம என்னால இருக்க முடியாது நான் அப்படியே வாழ்ந்துட்டேன் உங்களுக்கே தெரியும் நான் என்ன பண்றது "என சிதம்பரம் சொல்லி ஆதவனை உற்றுப் பார்த்தார். உடனே ஆதவனுக்கு ஒரு யோசனை வந்தது செல்வத்திற்கு தொலைபேசி போட்டான். அவன் எடுத்ததும் " செல்வம் கிராமத்தில் விவசாயம் தானே பார்க்க போற நமக்கு தெரிஞ்சவர் இன்னும் சொல்லப்போனா எங்க அப்பாவுக்கு ரொம்ப வேண்டியவர் என் குடும்பத்துல ஒருத்தர் சிதம்பரம் அவர கூட வச்சுக்கோ விவசாயம் நல்லா பார்ப்பார்" என அவன் சொல்லும்போது இடைமறித்தான் செல்வம் . "இல்ல ஆதவா என் முடிவை மாத்திக்கிட்டேன் வீட்டுக்கு வந்து நீ சொன்னதை என் மனைவி கிட்ட சொன்னேன் அவளும் விவசாயம் பண்ணி ஒரு மூணு முட்டை நெல்லு அரிசி வரப்போகுது அதுக்காக ஏன் அவ்வளவு கஷ்டப்பட்டு விற்று விடுங்கள் என சொல்லிட்டா அதை விக்கலான்னு இருக்கேன் "என அவன் முடிவு மாற்றிக் கொண்டதை சொன்னவுடன் ஆதவன் மனம் சுருங்கியது. சிதம்பரத்தை பார்த்தபோது அவரும் விஷயத்தை கிரகித்து முகம் வாடினார். செல்வம் விவசாயம் பார்க்கப்போவதாக சொன்னபோது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் ஆதவன் மனதுக்குள் அது ஒரு மகிழ்ச்சியான செய்தியாக தான் இருந்தது எனவே செல்வம் இப்போது முடிவை மாற்றிக் கொண்டதும் ஆதவனுக்கு ஒரு யோசனை தோன்றியது உடனே அதை செல்வத்திடம் சொன்னான் செல்வம் அந்த இடத்தை விக்கிறதா சொன்னேன்ல அதை நானே வாங்கிக்கிறேன் என சொல்லி டோக்கன் அட்வான்ஸ் தொகையையும் உடனே அனுப்புவதாக சொன்னதும் செல்வம் ஒத்துக் கொண்டான் மகிழ்ச்சியாக. கைபேசியை வைத்த ஆதவன் சிதம்பரத்தை பார்த்து" ஐயா அந்த நிலத்தை விக்கப்போவதில்லை உங்களுக்காக தான் அந்த நிலம் வாங்குறேன் எனக்கு சில விஷயங்கள் மனசுக்குள்ள இருக்கு ஆனா புரியல இப்ப புரியுது என சொன்ன போது சிதம்பரம் "தம்பி கொஞ்ச நாள் கழிச்சு வாங்குன நிலத்தை வித்திட மாட்டீங்களே மறுபடியும்" என சந்தேகமாக கேட்டபோது "கண்டிப்பா விக்க மாட்டேன் சிதம்பரம் நான் ரிட்டயர் ஆனதுக்கு அப்புறம் கிராமத்துக்கு தான் வரப்போறேன் அங்கதான் செட்டில் ஆகப் போறேன் இடையிலையும் விடுமுறை ஓய்வுல வருவேன் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா விவசாயத்தை காத்துக் கொடுங்கள் சொந்த மண்ணை பார்த்துகிட்டு விவசாயத்தையும் பாத்துட்டு நிம்மதியா சொந்த ஊர்ல உக்காந்தா தான் அதுல ஒரு நிம்மதி கிடைக்கும் நிச்சயமாக விக்க மாட்டேன் நீங்க இன்னைக்கு வந்தது நல்ல விஷயம் தான் சிதம்பரம் சாப்பிட்டு காலையில் நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன் கிராமத்துக்கு" என சொல்லி சிதம்பரத்தை சாப்பிட வைத்தான் . ஆதவன் சாப்பிட்டுவிட்டு அன்று இரவு நிம்மதியாக தூங்கினான். -ஜனனி அந்தோணி ராஜ் திருச்சிராப்பள்ளி Breaking News:
நிலம்