வாழ்விக்க வந்த மழையின்
வரைமுறையற்ற நீட்சி
பெரு வெள்ளம்.
நீர்மைப் பெருக்கத்தில்
கரையாது திண்மமாகும்
கண்ணீரின் உவர்ப்பு.
ஓட்டத்தின் திசைக்கெதிராய்
தக்கை போல் எஞ்சியிருக்கிறது
மீந்த வாழ்வு.
அடித்துச் செல்லப்பட்ட சேய்மை
அரண் தாண்டி
மீண்டெழுந்து துஞ்சுகிறது
துடிதுடித்த தாய்மையின் தோளில்.
நிற்கட்டும் தூறல்.
நீந்துதல் அத்தனை எளிதன்று.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )