Breaking News:
tamilnadu epaper

நூலகம் செல்வாய்

நூலகம் செல்வாய்


அகம் மகிழச் செல்லடா

நூலகம்!

அறிவொளியை தருகின்ற நூலகம்!

யுகம் புரிய செல்லடா

நூலகம்.! 

உனக்காகத் திறந்திருக்கும் நூலகம்!


படிப்பறிவு பட்டறிவாய் மாறனும்..

பகுத்தறிவும் மனதுக்குள் ஏறனும்.!

நடப்புதனை நாள்தோறும் அறிவிக்கும்.! நல்லறிவை புத்தகமே போதிக்கும்!


அடுக்கிவைத்த புத்தகத்தைப் புரட்டனும!

அறிவுப்பால் புத்தகமே புகட்டனும்! 

படிக்கவைத்து படிகளாகும் நூலகம்!

பாதையெல்லாம் நமது நாட்டில் திறக்கனும்!


-வே.கல்யாண்குமார்