tamilnadu epaper

பக்தர்களின் லட்சணங்கள்

பக்தர்களின் லட்சணங்கள்


    பக்தர்கள் எப்படி இருப்பார்கள் அவர்களுடைய லட்சணம் என்ன என கேட்டதற்கு ஒரு அறிஞர் பின் வருமாறு 20 நற்பண்புகளைச்சொன்னார்.


   1. அவர்கள் எப்பொழுதும் பகவான் ஞாபகமாகவே இருப்பார்கள். அவர்களுடைய உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, அவர்களுடைய மனது பகவானையே தியானம் செய்து கொண்டிருக்கும்.

2. அவர்கள் உலக விவகா ரங்களில் சிக்கி கொள்ள மாட்டார்கள்.

3. அவர்கள் ஒழுக்கத்துடன் காணப்படுவார்கள்.

4. அவர்கள் எப்பொழுதும் நியாயத்தின்படி நடப்பார்கள்.

5. அவர்கள் யாரையும் நிந்தனை செய்ய மாட்டார்கள். பிறர் தோஷங்களைப் பார்க்க மாட்டார்கள்.

6. அவர்கள் கோபம் கொள்ள மாட்டார்கள். அக்கிர மக்கார னைக்

     கண்டு அவர்கள் கோபம் கொண்டால், அது வெறும் நடிப்பே ஒழிய, உண்மைக்கோபம் இல்லை.

7. பிற மாதரை மனத்தாலும் நினைக்க மாட்டார்கள்.

8. பிறர் பொருளுக்கு ஆசைப்பட மாட்டார்கள். நியாய வழியில் பணம் சம்பாதிப்பார்கள்.

9. பிறருக்கு கெடுதல் விளைவிக்க மாட்டார்கள். அவர்கள் மனம் நோகும்படி பேச மாட்டார்கள்.

10. எந்தப் பொருளுக்கும்

      ஆசைப் பட மாட்டார்கள்.

 11. பிறர் கஷ்டங்களைத் தங்களால் இயன்ற வரை தீர்த்து வைப்பார்கள்.

12. அவர்கள் கர்வம் கொள்ள மாட்டார்கள்.

13. அவர்கள் யாரையும் வெறுக்க மாட்டார்கள்.

14. தங்கள் உடலைக் கொண்டு நல்லக் காரியங்களை செய்வார்கள்:கெட்ட காரியம் செய்ய மாட்டார்கள்.

15. தங்கள் பொருளையும் சம்பளத்தையும் கெட்ட காரியங்களில் செலவழிக்க மாட்டார்கள். தங்கள் ஆன்மீக முன்னேற்றதிற்கு எது எல்லாம் உதவுமோ, அதில்தான் செலவழிப்பார்கள்.

16. அவர்கள் இனிமையாகத்தான் பேசுவார்கள். மெய்யைத்தான் பேசுவார்கள்.

17. கூடிய வரை, மக்களுக்கு நன்மை செய்வதிலேயே நாட்டமாக இருப்பார்கள்.

18. அவர்களுடைய நடத்தை சுத்தமாக இருக்கும். நல்லவர்கள் போல வேஷம் போட மாட்டார்கள்.

19. அவர்கள் யாரைக்கண்டும் பொறாமைப் படமாட்டார்கள்.

20. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்போதும் பகவானை

 வேண்டிக்கொண்டு இருப்பார்கள்.


ஆக பகவானின் பக்தனாக ஆக விரும்புகிற வர்கள் மேலே சொன்ன நற்குணங்கள் தங்களிடம் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். இல்லையேல் அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

   நாம் உடலை வருத்திக் கொடிய தவம் செய்ய வேண்டாம். மேலே சொன்ன இருபது நற்பண்புகளை நமதாக்கிக் கொண்டால் போதும்.


       

-M. ராதாகிருஷ்ணன்,

அஞ்சல்துறை (ஓய்வு)

வளையாம்பட்டு போஸ்ட்

வாணியம்பாடி-635751