. ஃ பணக்காரன் பின்னும் பத்து பேர். பைத்தியக்காரன் பின்னும் பத்து பேர்.
ஃ வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
ஃ செருப்பின் அருமை வெயிலில் நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
ஃ அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
ஃ கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு.
ஃ நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.
கண் குருடு என்றாலும் நித்திரையில் குறையுமா?
ஃ. எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்.
ஃ தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பன் வீட்டை சுடும்.
ஃ சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடி. .
ஃ கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
-ந. சண்முகம்
திருவண்ணாமலை