என்ன அப்பா... ஊருல இருந்து கிளம்பும்போதே போன் பண்ணியிருக்கலாமே... பஸ் ஸ்டேண்டுக்கு வந்து போன் பண்றீங்க... ரேணுகா வீட்டுல இல்ல..." />
tamilnadu epaper

பாசமெல்லாம்

பாசமெல்லாம்


          "என்ன அப்பா... ஊருல இருந்து கிளம்பும்போதே போன் பண்ணியிருக்கலாமே... பஸ் ஸ்டேண்டுக்கு வந்து போன் பண்றீங்க... ரேணுகா வீட்டுல இல்ல... பசங்கள அழச்சிக்கிட்டு லீவுக்கு அவங்க அம்மா ஊருக்கு போயிருக்கா... நானும் ஆபிஸ் விஷயமா இன்னைக்கி மதியமே சென்னைக்கு கிளம்புறன்... நீ

வீட்டுக்கு போய் தனியா என்ன பண்ணபோற...சாப்பாட்டுக்கு கஷ்டப்படணும்... கோவிச்சிக்காம வந்த

'பஸ்' லேயே ஊருக்கு கிளம்புங்கப்பா...

அடுத்த லீவுல பசங்களை அழச்சிக்கிட்டு

ஊருக்கு வறன்..." அப்பாவை 'பஸ் ஸ்டேண்டில்' இருந்தபடியே செலவுக்கு

பணம் கொடுத்து 'பஸ் ' ல் ஏற்றிவிட்டு 'ஆபீஸ்'க்கு கிளம்பினான் முருகேசன்.

              அப்பாவிடம் பொய் சொல்லி ஊருக்கு அனுப்பியது அவனுக்கு மனம்

உறுத்தலாகத்தான் இருந்தது.என்ன செய்வது, இவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றால் இவர் நடந்து கொள்வது

பிடிக்காமல் மனைவி சங்கடப்படுவாள். 

         மாமனார் வீட்டிற்கு வராமல் இருக்க

என்ன வழியோ அதை செய்தாள்

          "ஏங்க எதிர் வீட்டுக்கு வந்திருக்கும்  

அவங்க அப்பா அம்மா எவ்வளவு நீட்டா 'ட்ரெஸ்' பண்ணிக்கிட்டு நாகரீகமான நடந்துக்குராங்க...உங்க அப்பா மட்டும்

அழுக்கு வேட்டி சட்டையோட இங்க வராரு

வெத்தலபாக்கு போட்டு கண்ட இடத்தில

துப்புறாரு...அநாகரீகமா நடந்துக்குறாரு...

எனக்கு அவமானமா இருக்கு... 

 பிள்ளைங்கல பாக்குற சாக்குல இங்க வந்துடபோறாரு... மீறி வந்தாருன்னா நான் பொல்லாதவளா ஆயிடுவன்..." என்று

மனைவி ஏற்கனவே எச்சரித்து இருக்கிறாள்

        அதற்காகத்தான் அப்பாவை வீட்டுக்கு

அழைத்துச்செல்லாமல் 'பஸ் ஸ்டேண்டில்

இருந்தபடியே ஊருக்கு பஸ் ஏற்றிவிட்டான்.

          முருகேசன் கம்பெனியில் வேலை பார்க்கும் 'நைட்சிப்ட்' வாட்ச்மேன்' பஸ் ல் அமர்ந்திருந்த அப்பாவை பார்த்து நலம் விசாரித்தபடியே , " சார் புளி கேட்டிருந்தார் இப்பதான் வீட்டுல கொடுத்துட்டு அம்மாகிட்ட அதான் உங்க மருமககிட்ட

பணம் வாங்கிட்டு வரேன்... பாத்து போய் வாங்க... நான் மூணாவது 'பஸ் ஸ்டாப்' ல

இறங்கிடுவன்..."சொல்லிவிட்டு பின்னால் இருக்கும் சீட்டில் அமர்ந்தான்.

     'மருமக பசங்கள அழச்சிக்கிட்டு ஊருக்கு

போயிருக்குன்னு பையன் சொன்னான்...

வாட்ச்மேன் என்னடான்னா இப்பதான் பாத்துட்டு வரேன்னு சொல்றான்... ஒருவேளை நாம வீட்டுக்கு போறது

பிடிக்கலயோ... நாமதான் பேரபுள்ளைங்க பெத்தமகன்னு பாசத்துல அலையிறோம்...

இந்த காலத்துல பாசமெல்லாம் வேஷமாபோச்சி... இனிமே பாசத்தை மனசுக்குள்ளேயே வச்சிக்கிட்டு அடுத்தவங்களுக்கு இடையூறா இருக்காம வாழணும்... பெத்த புள்ளயே பொய் சொல்லிட்டானே ...' மனம் ஆறவில்லை கண்ணீரை துடைத்தபடியே 'பஸ்' ல் பயணித்தார்.


-சுகபாலா,

திருச்சி