tamilnadu epaper

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான அவசியம்.!

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான அவசியம்.!

 

 

தாய்ப்பால்பிறந்த குழந்தையின் முக்கியமான ஊட்டச்சத்து ஆதாரம் என்றால் அது தாய்ப்பால் தான். பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்களிடம் இருந்து கிடைக்கும் தாய்ப்பாலானது எதிர்ப்பு சக்தி நிறைந்த பாதுகாப்பு கவசமாக விளங்குகின்றது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து, நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கச் செய்கிறது. தாய்ப்பாலில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் பல உயிர்ச்சத்துக்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. இதனால் குழந்தை ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை அடைகின்றது. தாயின் பாலில் பொதுவாக மூன்று நிலைகள் உள்ளது. முதல் நிலையானது சக்கரை தண்ணீர் போல இருக்கும். அடுத்த நிலை திரவமான பால், இது பாலில் தண்ணீர் கலந்தது போல இருக்கும், மூன்றாவது நிலை திடமான பால். தாய்ப்பால் சுரக்க தாயின் மனநிலையும், உடல்நிலையும் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஆறு மாதங்கள் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என (WHO) உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இரண்டு வயது வரை அல்லது அதற்கு மேல் தாய்ப்பாலும் அதோடு கூட மற்ற சத்தான உணவுகளையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒவ்வாமைகளை குறைக்கிறது.தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது.தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.

 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai