*(1)*
172 ஒவ்வொரு மனிதனும் தான் செய்துவிட்ட தவறுக்குத் தந்து வரும் பெயரே அனுபவம்
*- ஆஸ்கார் ஒயில்டு*
*(2)*
தீர்க்கதரிசி தங்கள் நாவினால் பேசுவதில்லை. வாழ்க்கையின் மூலமே பேசுகிறார்கள்
*- மஹாத்மா காந்தி*
*(3)*
மனிதன் கடைபிடிக்க வேண்டிய அத்தியாவசியமான கடமைகள் - ஈந்து வளர்த்த தாய் தந்தையருக்கும், உறவினக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை செவ்வனே செய்ய வேண்டும். நட்புக்கு இலக்கணமானவர்களிடத்து அறநெறியுடன் நடந்து கொள்ள வேண்டும். பறவைகள், விலங்குகள் இவைகளிடத்திலும் அன்புடன் நடந்து கொள்ளவேண்டும்
*- புத்தர்*
*(4)*
உண்மையின் பொருட்டு எதையும் தியாகம் செய்யலாம், ஆனால் எச் சூழ்நிலையிலும் உண்மையினை தியாகம் செய்யக் கூடாது
*- விவேகானந்தர்*
*(5)*
சிந்தனை - சக்தியின் பிறப்பிடம்
விளையாட்டு - இளமையின் ரகசியம்
படிப்பு - அறிவின் ஊற்று
நட்பு - மகிழ்ச்சிக்கு வழி
உழைப்பு - வெற்றியின் விலை
*- நபிகள் நாயகம்*
-ஆர். ஹரிகோபி,
புது டெல்லி