வைகறை வசந்தம்
கண்களில் நிழலாட
கனவுகள் நினைவாகக்
காத்திருக்கும் நேரம்
நீரலையின் அருகில்
நீந்திடும் சுகமும்
தென்றல் காற்றின்
தெவிட்டா இன்பமும்
இளைய மனது
இணையும் பொழுது
தித்திக்குதே இதயம்
மலர்ந்து சிலிர்த்து
மனதில் ஆசைகள்
மகிழ்ந்து உறவாடி
ஆனந்த ராகம்
பாடிடும் நேரம்
காதலில் வீழ்ந்து
கண்மூடிக் களிக்கும்
அலையாடும் உணர்வில்
உள்ளம் நெகிழ்ந்து
ஏக்கத்தின் பிடியில்
பெண்மை நாணிடும்
இன்பம் கொடுத்து
கிளர்ச்சியில் துடிக்கும்
உலகம் மறந்திடும்
இனிமைப் பொழுதில்
முத்தமிட்டு இதழ்கள்
மோகத்தில் திளைத்து
எழிலாய்த் தோன்றி
ஆசையுடன் அணைத்து
ஆனந்த யாழை
மீட்டி மகிழும்.
-தாராமதன்