மழை பொழியாவிடினும் விவசாய நிலங்கள் வறண்டு போய் எவ்வித விளைச்சலும் இன்றி அல்லல்படுபவனும் விவசாயி.
மழை அதிகமாகப் பொழிந்தாலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்களையும், முறிந்து சாய்ந்த வாழைகளையும் தொலைக்காட்சி வாயிலாக காண்பித்து கண்ணீர் வடிப்பதும் விவசாயி.
இந்நிலை என்றும் மாறுமோ?
அதனால் தான் வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
எழுதி வைத்தார்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
கொடுப்பதூஉம் எல்லாம் மழை.
அன்புடன்
உ.மு.ந.ராசன் கலாமணி
4, சுபி இல்லம்
கிழக்குப் பூங்கா தெரு
கோபிச்செட்டிப்பாளையம் 638452.