தேர்வு முடிந்து பள்ளியை விட்டு மாறிப் போகப் போகிற,மாண வர்களுக்கே உள்ள ஒருவித குறு குறுப்பு உணர்வில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது குறும்பு புதனத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தனர்.
வகுப்பா சிரியரான தமிழ் ஆசிரியரின் இறுதி வகுப்பு அது.
அது மட்டு மில்லாமல் தமிழ் ஆசிரியருக்கு பதில் சொல்ல முடியாத ஒரு கேள்வியை அவர்கள் தயாராக வைத்திருந் ததும் அவர்களது குறும்பு தனத்திற்கு ஒரு காரணம்.
தமிழாசிரியர் ரவி அவருக்கே உரிய பளீர் சிரிப்புடன் வகுப்புக்குள் நுழைந்தார். மாணவர்களுக்கு பிரியா விடை அளிக்கும் அதே நேரத்தில் அவர்களுக்கு சில அறிவுரைகளையும் கூறிகொண்டிருந்தார்.
"சார் ஒரு சந்தேகம் "என்றவாறே ஒரு மாணவன் எழுந்தான். அவன் மீது தனது பளீர் சிரிப்பை வீசியவர் "உனக்கு அப்படி என்னப்பா சந்தேகம்"என்றார்.
சார் உயிர் எழுத்தில் நெடிலுக்கு இரண்டு மாத்திரை தானே சார். மெய் எழுத்துக்கு அரை மாத்திரை தானே சார்.அப்ப உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்துக்கு ரெண்டரை மாத்திரை தானே வரணும்.ஆனா ரெண்டு மாத்திரை தானே வருது. அரை மாத்திரை எங்கே போச்சுது சார் " என்று கேட்டு விட்டு,ஆசிரியர் பதில் சொல்ல முடியாமல் தினறப் போகிறார் என்று எண்ணிக்கொ ண்டான்.
"இலக்கணத்தை நன்றாகப் படித்திருக்கிறாய்.அருமையான கேள்வி. இதுவரை யாருமே சிந்திக்காத ஒன்று. இதற்கு நான் ஒரு செயல் முறை விளக்கம் மூலம் பதில் சொன் னால்தான் உங்களுக்குப் புரியும்
என்று நினைக்கி றேன் "என்று கூறிவிட்டு அந்த மாணவனைப் போய் ரெண்டு லிட்டர் தண்ணீரும் அரை கிலோ உப்பும் வாங்கி சொன்னார். தண்ணீரில் உப்பை போட்டு கலக்கச் சொன்னார். உப்பு கரைந்ததும் தண்ணீரை அளந்துபார்க்கச் சொன்னார்.
ரெண்டு லிட்டர் தான் இருந்தது.
அரை கிலோ உப்பு எங்கே என்று கேட்டார். "தண்ணீரில் கரைந்து போயிருக்கும் சார்" என்றான் "மாத்திரையும் அப்படித்தான் கரைந்துபோய் விடும்" என்றதும் மாணவர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆரவாரம் செய்யத் தொடங்கினார்கள்.
-குடந்தை பரிபூரணன்.