வண்ண தானம்
செய்கிறது_ மயில்
வாழ்வை மகிழ்விக்க!
வாழ்வை வெல்லும் படி
வலை பின்னி காட்டுகிறது
சிலந்தி!
எண்ணத் தடத்தை
எண்ணிய வழியில்
தன் குழியை அடைகின்றன
எறும்புகள்!
ஊறும் உணர்வும்
உதிக்கும் சிந்தனையும்
ஊருக்கு பயன் என்கிறது
குருவிக்கூடு!
இயலாமையால் ;அல்ல
முயலாமை யால்தான்
தோல்வி என்பதை
சொல்கிறது அலை!
அழியாத மூலதனம்
முயற்சியே என்கிறது
அன்றாடம் வருகிற;
பொழுது!
வாழ்வின் சிறப்பு
வாழும் வகையில் தான்
என்பதை உணர்த்துகிறது
காற்றாடி!
முயற்சி செய்யாத போது தான்
தோல்வியில் முடிகிறது
வாழ்க்கை!
வாழ்க்கை செடியின்
வேரும்;
வாழும் பாதையின்
ஒளியும்;
தன்னம்பிக்கை தான்!
முயற்சித்த படியே இரு!
முன்னேற்ற சிகரத்தின்
முதல் காலடி
உன்னுடையது தான்!!
-வெ. தமிழழகன் எம்ஏ பிஎட்
சேலம்