அவன் பெண்ணாய் பிறந்திருந்தால்" />

Breaking News:
tamilnadu epaper

ரதிகளுக்காய் பிறந்த மாலினி

ரதிகளுக்காய் பிறந்த மாலினி



  மாலினி 

அவள் மனதுக்குள் தான் பெண்ணாய் பிறந்ததற்கு கவலைப்பட்டாள்

    பாரதி சொல்லிவிட்டான் "மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்" என்று 

    அவன் பெண்ணாய் பிறந்திருந்தால் நிச்சயம் இப்படி சொல்லி இருக்க மாட்டேன் 

    ஒரு பெண்ணுக்கு சமூகத்தில் எத்தனை பிரச்சனைகள் என சிந்தித்துக் கொண்டிருக்கையில் இடையை குறுக்கிட்டு பேசினால் ரதி "என்ன யோசனை"

     "ஒன்னும் இல்லை"0 என்றால் மாலினி

    இருவரும் கல்லூரி தோழிகள் இப்பொழுதோ ரதி திருமணமாகி மூன்றாம் வருடத்தில் தோளும் துருத்தியமாய் இருந்தாள்

      ரதி பெயருக்கு ஏற்றபடி கல்லூரி நாட்களில் அவள் படித்த கல்லூரியில் சினிமா கதாநாயகியை போல் இருந்தவள் இன்று பார்க்க அலங்கோலமாய் இருக்கிறாள் 

    அவளின் நிலையை கண்டு துவண்டு போயிருந்த மாலினி 

   "ரதி உன் வாழ்க்கை இப்படி ஆகும்னு என்னால நினைச்சு பார்க்கவே முடியில"

   "என்ன செய்யறது நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்"

    "உங்க அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க உங்க சித்திக் கொடும் தாங்க முடியாம நீ வளர்ந்த உங்க அப்பா உன்னைய சுத்தமா கண்டுக்கல நீ கட்டிக்கிட்ட புருஷனும் குடிகாரன் மாமனார் மாமியார் கொடுமைக்காரர்கள் உனக்கு வாழ்ந்த வீட்டிலும் நிம்மதி இல்லை போன வீட்டிலும் நிம்மதி இல்லை"

    "ஆமா எங்கேயும் என்னை ஒரு பெண்ணாக எவரும் மதிக்கவில்லை உணரவில்லை உறவுகளும் வாய்க்கு வந்தபடி கேவலமாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள் இந்த பூமி வாழ்க்கை எனக்கு நரகம் இதெல்லாம் பாரதிக்கு தெரியுமா" என அழுதாள்.

   மாலினி தன் தோளில் அவளை சாய்த்து கொண்டு அவள் தலையை கோதி ஆறுதல் படுத்தினாள். 

   மாலினியின் தொடுதலில் நான் உன் கூட இருக்கிறேன் எனும் உணர்வை ரதிக்கு கொடுத்தது

    மாலினி வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுபவள் பெற்றோர் மற்றும் வேறு யார் என்றாலும் தப்பு என்றால் முகதாட்சண்யம் பார்க்காமல் நியாயத்திற்கு மட்டுமே தோள் கொடுப்பவள் தப்புக்கு துணை போகிற அடங்கிப் போகின்ற குணம் இல்லாதவள்.

    படிப்புதான் தனக்கு முதுகெலும்பு என்பதை உணர்ந்தவள் இன்று கஷ்டப்பட்டு படித்து ஒரு மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறாள். 

   இருந்தும் தன் தோழி ரதியின் கண்ணீரை முழுவதுமாக துடைக்க முடியா த நிலையை எண்ணி அவள் மனம் அதிகமாய் உடைந்து போயிருந்தது.

    அவள் மனதுக்குள் "என்ன செய்வது பல ரதிகள் வாழ்வு மாற்ற முடியாமல் தானே இச்சமுதாயத்தில் இருக்கிறது" என் நினைத்தவளாய் 

   ரதியை தன் வீட்டில் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு இன்னொரு ரதியின் துயர் துடைக்க விசாரிக்க லத்திதோடு இப்பொழுது ஸ்டேஷனுக்குள் மாலினி நுழைந்து கொண்டிருந்தாள்.


-கவிமுகில் சுரேஷ்

தருமபுரி