அன்புடையீர்,
வணக்கம் 3/4/2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் கச்சத்தீவு மீட்பு தீர்மானம் என்ற சட்டசபையில் நிறைவேறியதை பற்றி விவரமாக படித்ததும் இன்றைய இந்திய அரசியல் மிக அருமையாகவும் தெளிவாகவும் புரிந்தது. இன்றைய பஞ்சாங்கம் மிக அருமையான தகவலாக எனக்கு நல்லவற்றை அழகாக சொன்னது. எல்லை கட்டுப்பாடு கோட்டை தாண்டி பாகிஸ்தான் ராணுவம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது. இன்றைய திருக்குறள் மிகவும் அற்புதம். அதன் பொருளும் திருக்குறளையும் படிக்கும் போது உற்சாகமாக இருந்தது. மதுரையில் 5000 மரக்கன்றுகள் நடப்பட்ட சாதனை பற்றி படித்ததும் பெருமையாக உணர்ந்தேன்.. கள்ளக்குறிச்சியில் நான்காம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என்ற எடப்பாடி பழனிசாமி அவர்களின் அறிவிப்பை படித்ததும் என்ன ஆர்ப்பாட்டமோ என்று யோசிக்க வைத்தது. கிவி பழத்தில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அதன் பயன்களைப் பற்றி படித்தது இவ்வளவு நாள் இந்த பழத்தை சாப்பிடாமல் இருந்தோமே இனி சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்க வைத்த நல்ல அருமையான தகவலை நலம் தரும் மருத்துவம் பகுதியில் தெரிந்து கொண்டேன். சென்னையில் உள்ள ஐ சி எப். ஆலையில் ஒரே ஆண்டில் 3007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை புரிந்த அந்த செய்தியை படத்துடன் படித்த பொழுது என் தந்தை ஐ சி எ பில் வேலை செய்த அந்த நாட்கள் என் கண் முன்னே வந்து நின்றன .. தினம் ஒரு தலைவர்கள் பகுதியில் துரைசாமி வரலாறு மிகவும் அருமை. நல்ல புதிய புதிய தலைவர்களை பற்றி அழகாக வரலாற்றுச் செய்தியாக கொடுத்து எங்களின் வரலாற்று அறிவுக்கு நல்ல தீனி அளிக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பல்சுவைக் களஞ்சியம் பகுதி மிகவும் அருமை அதில் வரும் மீம்ஸ் நம் கவலையை மறந்து ஆனந்தமாக சிரிக்க வைப்பது உண்மை. வாங்க சம்பாதிக்கலாம் என்று சம்பாதிக்கும் அழகான வழிமுறைகளை சொல்லிக் காட்டி எல்லோருக்கும் ஊக்கமளிக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்நாடு இ பேப்பரில் பதினாறாம் பக்கம் என்றாலே மிகவும் பரவசம் ஊட்டும் பக்கம். அதில் வரும் கோவில் செய்திகளும் எங்கெங்கு என்னென்ன திருவிழாக்கள் நடந்தது என்றும் மிக அருமையாக படங்களுடன் படிக்கும் போது அந்தந்த ஊர்களுக்கே சென்று நேரில் பார்த்தது போல ஒரு ஆத்ம திருப்தியை அளிப்பது தான் உண்மை. புதுச்சேரியில் பொதுத் தேர்வில் பாடபுத்தகங்களை பார்த்து எழுதுமாறு ஆசிரியர்கள் கூறியதாக புகார் என்ற செய்தியை படித்தது மாணவர்கள் படிக்காமலேயே தேர்வு எழுதி வெற்றி பெற்று விடலாமா என்று எண்ண வைத்த செய்தி. ஒரே நாளில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் திபெத் மற்றும் எல்லா ஊர்களிலும் நிலநடுக்கம் என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது இந்த நிலநடுக்கத்தில் எத்தனை நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று மிகத் தெளிவாக எங்களுக்கு உணர்த்தி எச்சரிக்கை உணர்வை கொடுத்த தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்தின் மிக அருமையான பணிக்கு ஒரு ராயல் சல்யூட்.உங்கள் பணி என்றென்றும் இதுபோல் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
நன்றி
-உஷா முத்துராமன்