tamilnadu epaper

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-02.04.25

வாசகர் கடிதம் (சின்னஞ்சிறுகோபு)-02.04.25


  தாமிழ்நாடு இ.பேப்பரின் முதல் பக்கத்தில் 'இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரி அமெரிக்கா திட்டம்' என்ற தலைப்பு செய்தியை படித்து வருத்தமாக இருந்தது. இப்போது அமெரிக்காவில் இருக்கும் நான், இதைப்பற்றி கருத்து எதுவும் சொல்லவிரும்பவில்லை!


  நான்காம் பக்கத்தைப் பார்த்த நான், அதில் வெளிவந்திருந்த எழுத்தாளர் திருவண்ணாமலை ந. சண்முகம் அவர்களின் கண்ணீர் அஞ்சலி விளம்பரத்தைப் பார்த்து நிலைக்குலைந்துப் போனேன். இவர் என்னுடைய ஐம்பது ஆண்டுகால நண்பர். அவருக்கு 75 வயது. எனக்கு 71 வயது. ஐம்பது வருட காலமாக அவரும் பல்வேறு பத்திரிகைகளில் நிறைய எழுதி வந்திருக்கிறார். நானும் எழுதி வருகிறேன். மிக நல்ல குணமுள்ள தங்கமான மனிதர். எழுத்தை தவிர, பல தொண்டு நிறுவனங்களிலும் சேர்ந்து பல்வேறு ஆன்மிக, இலக்கிய, நலப்பணிகளையும், செய்து வந்தார். நமது தமிழ்நாடு இ.பேப்பரில் அவர் நிறைய எழுதியிருப்பதுடன், இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 'கருணை உள்ள கடைவுளே... ஏன் இறைவா இப்படி சோதிக்கிறாய்?' என்று கவிதை எழுதியிருந்தார். அவரது எதிர்பாராத திடீர் மறைவு என் மனதை என்னவோ செய்கிறது. அதனால் இந்த கடிதத்தை மேற்கொண்டு எழுதாமல் இத்துடன் நிறைவு செய்கிறேன்.



 -சின்னஞ்சிறுகோபு,

  சிகாகோ.