tamilnadu epaper

வாசகர் கடிதம் (சிவ. சே. முத்துவிநாயகம்)-01.04.25

வாசகர் கடிதம்  (சிவ. சே. முத்துவிநாயகம்)-01.04.25


   அரசியலில் ஊகங்களுக்கும் வதந்தி

களுக்கும் எப்போதும் பஞ்சமே கிடையாது.

ஆர் எஸ்எஸ் அலுவலக விழாவில் கலந்து கொள்ளச் சென்ற பிரதமரை பதவி விலக தெரிவிக்கச் சென்றார் என கதை கட்டி விட்டார்கள்.

     சிரித்து வைப்போம்—திருமாமகள் கவிதையில் தனிக்குடும்பம் இன்று தணிக்கைக் குடும்பம் ஆனது என்றும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசி நன்றாக சிரித்து வைக்கிறோம் என்றும் சமுக அவலத்தைச் சுட்டியுள்ளார் .உண்மை.

       பானுமதி நாச்சியார் இட்லிக் கவிதையில் 

  வாயிலே சுவையுண்டு வெந்த நிலவுக்கே என்கிறார். இட்லியை வெந்த நிலவாக உருவகிக்கிறார் .

ஒவ்வொருவர் கவிதையிலும் புதிய கற்பனைகள் புதிய சொல்லாட்சி . அற்புதம்

       அலைபேசிகளில் நாள் தோறும் புதுப்புது வசதிகள் அறிமுகமாகிறது. குக்கிராமங்களில் கூட 

பயன்பாடும் பலனும் பெருகி வருகிறது. நல்ல வழிகளில் பயன்படுத்தி பலன் பெற வேண்டும்.

      போகர் சித்தர் வரலாறு அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.

   திரு வி க வின் தமிழறிவு தமிழ்கூறும் நல்லு்லகில் என்றும் அழியாதது. 

      அமெரிக்க பெண் ரூ1000/- க்கு வாங்கிய பழைய ஓவியம் பல கோடி ரூபாய்க்கு விலை போகலாம் எனக் கண்டறிந்திருக்கிறார் .

கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்ச்சுக்கிட்டு

கொடுக்கும் என்பார்களே அது இது தானோ!

     உலக நாடுகளுக்குள் கருத்தொற்றுமை ஏற்பட வேண்டும். அணு ஆயுதப் போருக்கு வழி வகுத்திடல் கூடாது.

     ஆரஞ்சுப் பழமும் தக்காளியும் அறியாத சிறுகுழந்தை கூட கிடையாது. அதன் பலன்களை அழகுறச் சொல்லியிருப்பது அழகோ அழகு.

     சமையல்காரர் பக்கோடா வகைகள் பலவிதமா? 

      66 வயதில் செருமானிய நாட்டுப் பெண்மணி 10 வது குழந்தையை ஈன்றெடுத்திருக்கிறார்.

மனவலு உடல்வலு மிக்க வீராங்கனை தான் வாழ்க

    தங்கம் விலை போகிற போக்கில் பெண்கள் மிகமிகக் கவனமுடன் தான் நடமாட வேண்டும்.

      கணவனும் மனைவியுமான 2 திறமையான ஐஏஎஸ் அலுவலர்கள் அரசியல் சூறாவளியில் பதவியைத் துறந்திருக்கிறார்கள்.

மக்கள் நலன் மக்கள் நலன் என்றே உழைத்தவர்கள் மனம் எவ்வளவு வெதும்பி இருக்கும்.



-சிவ. சே. முத்துவிநாயகம்

திருநெல்வேலி