தெய்வீகத் தியாகம்
புல்லரிக்க வைக்கிறது.
பெருந் தனவந்தர்கள்
தம் இன்னுயிரைப் பெரிதென எண்ணாமல்
நீரில் மூழ்கி உயிர் துறந்ததை என்னென்று சொல்வது.
வேலூர் பொற்கோவிலில் 1500 தகிலோ தங்கத் தகடு பொருத்தப் பட்டுள்ளது.
அரிய தகவல் அறிய வியப்பு.
மூளையைப் பாதிக்கும் பழக்க வழக்கங்கள் நல்லதோர் தகவல். புரிந்து நடந்தால்
எல்லோர்க்கும் நல்லது.
பிசாவும் பர்கரும் ஆட்டிப் படைக்கிறதே.
கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிக்கான முதல் ஆகாய
கப்பல் பரிசோதனை வெற்றி என டி ஆர் டிஏ அறிவித்திருப்பது மிக்க மகிழ்ச்சி. வெற்றி மீது வெற்றி விண்வெளிச் சாதனை. பாராட்டுகள் அறிவியலார்களுக்கு.
முத்துவடுக நாதர் காரணப் பெயர் தமிழர் வீரத்தைப் பறை சாற்றுகிறதே.
ஆந்திரா முறை பூண்டு பருப்புப் பொடி செய்வது எப்படி? ……. சாந்தா ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய் . பாடு சாந்தா பாடு வசனம் தான் நினைவுக்கு வருது
அரிசி மாவில் இனிப்பு
நா ஊறுது.
கவிதைகள் கதைகள் அனைத்தும் அருமை.
-சிவ. சே. முத்துவிநாயகம்
திருநெல்வேலி