வாதம் நரம்புத் தளர்ச்சியால் பீடிக்கப் பட்டு முடங்கிக் கிடப்போரின் முடக்கத்தை அறுத்து எடுத்து இயல்பாக இயங்க வைப்பதால்
*முடக்கறுத்தான்* கீரை என்பதே உண்மைப் பெயர். பேச்சு வழக்கில் முடக்கத்தான் கீரை என்று மருவி விட்டது.
தர்பூசணி பற்றிய தவறான தகவலை மக்கள் மனத்தில் இருந்து நீக்க அரசின் முயற்சி பாராட்டத் தக்கது. இனிமேலாவது மக்கள் மனத்தில் இருந்து அச்சம் விலகுமா ?
மனைவியின் பொய்யான வரதட்சணை குற்றச் சாட்டால் 16 வருடங்களாக ஒரு இராணுவ வீரர் தலைமறைவாக இருந்திருக்கிறார் .
இருவர் வாழ்க்கையும் தானே பாழாய்ப் போனது
எண்ணற்ற மருத்துவக் குறிப்புகள்.
அத்தனையும் மருத்துவ ரீதியாக உண்மையானது தானா? என்று சரி பார்த்து வெளியிடப் படுகிறதா? அவ்வாறானால் மிக்க பலனைத் தரும். சிறப்பே
இருபெரும் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு வெளி யிட்டுள்ளது பெருமை.
கன்னியாகுமரி மாவட்டம் இணைப்பு என்றாலே நேசமணியை மறக்க முடியாது. நினைவாக சிலை எடுப்பதாக அரசு அறிவித்துள்ளது.
சமீப காலமாக பல ஆளுமைகளுக்கு சிலைகள் மணிமண்டபம்
பல கோடி ரூபாய் செலவில் அமைக்க அரசு அறிவிப்பு வந்த வண்ணமாய் இருக்கிறது. பின் பாதுகாப்பு பராமரிப்பு என தொடர் செலவும் பெருகிக் கொண்டே போகும்.
சிலைகள் மணிமண்டபம் என அமைப்பதற்குப் பதில் வகுப்பறைக் கட்டிடங்கள் ஆய்வகம் இல்லாத பள்ளிகளுக்கு கட்டிக் கொடுத்து அவற்றிற்கு ஒவ்வொரு தலைவர்கள் பெயரைச் சூட்டலாமே.
அநேக மருத்துவ மனைகள் பள்ளிகள் பல
தலைவர்கள் பெயரில்
நிறுவப்படும் வழக்கம் இருந்தது.இதனால் தலைவர்கள் பெயரும் நினைவும் நின்று நிலைக்கிறது.ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
குடிநீர்த் தொட்டியில் விடம் கலந்து 30 மாணவர்களைக் கொல்ல
ஐதராபாத்தில் முயற்சி நடந்திருக்கிறது. என்ன கொடுமை. விடம் கலந்தவன் குழந்தை அதே பள்ளியில் படித்தால் இப்படிச் செய்வானா?
சென்னைக் கருகில்
இத்தனை தீவுகளா? சுற்றுலா செல்ல இயற்கையை அனுபவிக்க நல்ல வாய்ப்பு.
தற்பெருமைக்காக ரூ 50/- கோடிக்கு நாய் வாங்கியதாகப் பரப்புரை
செய்யும் அளவுக்கு மனநிலை. அமலாக்கத் துறைக்கு வேலை வைத்து விட்டார்.இது தேவையா?
சொத்துக்காக ஒரு தொழிலதிபரை 9 பேர் சேர்ந்து கடத்திய சம்பவம் மதுரையில் நடந்திருக்கிறது. 9 பேரும் கைதாகி இருக்கிறார்கள்.
எப்படித் தான் இவர்களை திருத்த?
நகைச்சுவை விடுகதைகள் காலத்திற்குத் தகுந்தாற் போல் உருவாக்கப்பட்டு
உள்ளது. அருமை
-சிவ. சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி